பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு క్షీడ్లీకి

குரிய மெய்யுணர்வுடைய பெரியோர்களையறிந்து வழி பட்டும் மன மாசகற்றும் தீர்த்தத்தின் இயல்பு தெரிந்தும் தம்மைத் தூய்மை செய்து கொள்ளுதல் வேண்டும் என் பதும், மன்னுயிர்கள் உய்தற் பொருட்டு இறைவன் அன்பர்க்கு எளிவந்து அருள்புரியும் அருள் நிலையங்களாகிய திருக்கோவிலின் பண்பு தெரிந்தும், அங்கு நிலையாக வீற்றிருந்து உயிர்களின் இடரகற்றி இன்பமளிக்கும் இறைவனது அதே முகத்து இயல்பு கண்டும், அம்முதல் வனை வழிபட்டுச் சிவநிந்தை, குருநிந்தை, மாகேசுவர நிந்தை ஆகிய தீமைகளினின்றும் நீங்கிப் பொறையென் னும் அணிகலனைப் பூண்டு, பெரியோரையறிந்து அவர் களைத் துணையாகக் கொண்டு நன்னெறியில் ஒழுகி உய்தி பெறுதல் வேண்டுமென்றும் ஆசிரியர் இத் தத் திரத்தில் அறிவுத்தியுள்ளார்.

மூன்ருந்தந்திரம் அட்டாங்கயோகம் முதல் சந்திர யோகம் ஈருக இருபத்தொரு தலைப்புக்களையுடையது. இதன் கண் எண்வகை யோகஉறுப்புக்களாகிய இயமம், நியமம், ஆதனம், பிராணுயாகம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவும், இவற்றை மேற்கொண்டோர் அடையும் பேறுகளும், அனிமா, லகிமா, மகிமா, பிராத்தி, கரிமா, பிராசாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண் வகைச் சித்திகளின் இயல்பும் பயன்களும், கலநிலை, காய சித்தி உபாயம் முதலியனவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இத் தந்திரப் பகுதியின் உள்ளுறையாவது சரீர சித்தி உபாயமாகும். உடம்பின்றி உயிர் தனித்து நின்று தொழில் புரிதல் இயலாது. உயிர் அறம் முதலிய உறுதிப்பொருளைப் பெறவேண்டுமாயின் அதற்குரிய முயற்சிகளை உடம்பொடு கூடி நின்றே செய்தல் வேண்டும். ஆகவே உயிர்க்கு ஞான சாதனமாகவுள்ள உடம்பினைப் பேணுதல் இன்றியமை யாதது என்னும் உண்மையினை,

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம் பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, (724) உடம்பினே முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக்குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண்டா னென் றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே. (725)