பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56

பன்னிரு திருமுறை வரலாறு

26. துணையது வாய் வருந் தூயநற் கல்வியே.--திருமந்திரம். (29க்)

ஒருமைக்கட் டான் கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து. -திருக்குறள்-398

27. கற்றவர் பேரின்பம் உற்று நின்ருரே ! -திருமந்திரம். (293)

28.

Žg

30,

31.

தாமின் புறுவ துலகின்புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந்தார். --திருக்குறள்-399, ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன் மின் பார்த்திருந் துண் மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணுங் கால மறிமினே.

--திருமந்திரம்-250. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு, (86) பாத்துாண் மரீஇ யவன ப் பசி யென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. (227) காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீ ரார்க்கே யுள. -திருக்குறள் (527)

தத்தஞ் சமயத் தகுதி நில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத்தண்டமுஞ் செயும் உம்மையில், இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

--திருமந்திரம்.247.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் ருெழில். --திருக்குறள்-549,

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடோறும் நாடி யவனெறி நாடானேல் நாடோறும் நாடு கெடுமூட நண்ணுமால் நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

-திருமந்திரம்.239.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். -திருக்குறள்-553,

ஒன்றேகுலனும் ஒருவனே தேவனும்" -திருமந்திரம். (2.104) * பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் --திருக்குறள். (972)