பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் £8%

வித்தினி லன்றி முளையில்லை யம்முளை வித்தினி லன்றி வெளிப்படு மாறில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல அத்தன்மை யாகும் அரநெறி காணுமே. (3192) என வரும் திருமந்திரத்தை அடியொற்றியமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

எல்லாரறிவுகளின் தாற்பரியம் என்னறிவு செல்லு மிடத்தளவுஞ் சென்றறிந்தேன்

(திருக்களிற்றுப்படியார்-56) எனவரும் தொடர்,

செல்லுமளவுஞ் செலுத்துமின் சிந்தையை (2103)

எனவரும் திருமந்திரத் தொடரை அடியொற்றியமைந்த தாகும்.

பதி பசு பாசம் எனப்பட்ட மூன்று பொருள்களும் என்றும் நிலையாகவுள்ள உண்மைப்பொருள்கள் என்பதனை,

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற் பசு பாசம் அளுதி ! (திருமந்திரம்-115) எனவரும் தொடரில் திருமூலர் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளார். இவ்வுண்மையினை,

நெல் லிற் குமியும் நிகழ்செம் பினிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன் மையே-வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம்’

'சிவஞானபோதம்-வெண்பா-12) எனவரும் வெண்பாவில் மெய்கண்ட தேவர் எடுத்தாண் டுள்ளமை இங்கு நோக்கத்தக்கதாகும்.

உயிர், தூலம் சூக்குமம் ஆகிய இருவேறு உடம்புகளி னின்றும் பிரிந்து செல்லுதலே விளக்குவதாக அமைந்தது,

அரவுதன் தோலுரிவும் அக்கனவும் வேறு பரகாயம் போய்வருமப் பண்பும்-பரவிற் குடா காய ஆகாயக் கூத்தாட்டா மென்ப தடாதுள்ளம் போமா றது.

(சிவஞானபோதம்-வெண்பா-14) என வரும் வெண்பாவாகும். உயிர் துரலவுடம்பினை விட்டு நீங்கிச் செல்லுதற்குப் பாம்பு தன் சட்டையைக் கழற்றிப் புதியதொரு தோல் போர்த்துச் செல்லுதலும், புருடன் நனவுடம் பின் நீங்கிக் கனவுடம்பிற் செல்லுதலும், யோகி

3i