பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 德85

அவனே தானே யாகிய அந்நெறி ஏக கிை இறைபணி நிற்க மலமாயை இன்ளுெடு வல்வினை யின்றே

(சிவஞானபோதம் சூ-10) எனவரும் நூற்பாவாகும். இது,

தானென் றவனென் றிரண்டென்பர் தத்துவந் தானென் றவனென் றிரண்டற்ற தன்மையை தானென் றிரண்டுன்னுர் கேவலத் தானவர் தானின்றித் தாளுகத் தத்துவ சுத்தமே. (2348) என்னும் திருமந்திரப் பொருளை அடியொற்றி அமைந்த தாகும்.

உயிர்களைப் பற்றிய மயக்கவுணர்வு அவ்வுயிரோடு உடனுய் நிற்கும் முதல்வனுகிய இறைவனையும் பற்றி நிற் கும்போலும் என நிகழும் ஐயத்தை நீக்கும் முறையில் அமைந்தது,

மெய்ஞ்ஞானந் தன்னில் விளையா தசத் தாதல் அஞ்ஞானம் உள்ளம் அணைதல்காண் - மெய்ஞ்ஞானத் தானே உளவன் றே தண்கடல்நீர் உப்புப்போல் தானே உளம் உளவாத் தான்.

(சிவஞானபோதம்-வெண்பா-44)

என வரும் செய்யுளாகும் மயக்கமாவது, ஒரு பெற்றித் தாய அறிவெனப்படும் சிவத்தின் முன் கதிர் முன் இருள் போல நிலையுதல் இல்லது; ஆதலின், அம்முதல்வன்கண் உளதாதலின்றி, அச்சிவம் என்று உள்ளதோ அன்றே தான் பொருந்துதற் குரிமையுடைய உயிர்கள் உள்ளனவாக அவ்வுயிர்களைப் பற்றி நிற்பதாகும். அஃது எதுபோல் எனின் தண்ணிய கடலின்கண் உளதாதலின்றி, அக்கட லிடத்துளதாகிய நீரைப்பற்றி நிற்கும் உப்புப்போல் என்று அறிவாயாக என்பது இவ்வெண்பாவின் பொருளாகும். இங்குக் கடல் என்றது. கடல் நீரையுணர்த்தாது அந் நீருக்கு இடந்தந்து அமைந்த பெருவெளியாகிய ஆகா யத்தை உணர்த்தியது. கடல் நீரிலுள்ள உப்பு அந்நீரைப் பற்றுவதன்றி அந் நீர்க்கு இடஞய் விளங்கும் பெருவெளி யாகிய ஆகாயத்தைப் பற்ருதவாறுபோல, உயிரின் கண்ணதாகிய மயக்கவுணர்வு, அவ்வுயிரைப் பற்றுவதன்றி அவ்வுயிர்க்குச் சார்பாயுள்ள முதல்வனைப் பற்றுவதன்று என்பதாம். இக்கருத்தினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,