பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ை க.க. இம்மையார் 怒签器

காரைக் காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி யென்னும் இந்நூல் அந்தாதியிலக்கியத்துள் தொன் மையும் சிறப்பும் வாய்ந்த விருந்துநூ லென்பது அறிஞர் துணி பாகும்.

திருவருள் ஞானம் பெற்றவர் காரைக்காலம்மையார் என்பது, திருவருள் ஞானமாவது முதலிகள் மூவர் காரைக் காலம்மை முதலாயினுேர்க் குண்டாகிய ஞான மென அறிக எனச் சிவப்பிரகாசம் 10-ம் செய்யுளுரையில் மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்கத்தால் இனிது புலனும், அம்மையார் இறைவனருளாற் பெற்ற திருவருள் ஞானத்தின் பயனகத் திகழ்வது அற்புதத் திருவந்தாதி. இந்நூல் ஒதுதற்கு இனிமையும் எளிமையும் உடையதாய் உணர்தற்கரிய உயர்த்த சிவஞானத்தியல்பினைத் தெளிவு படுத்துவது. காதலாகி ஒதும் அன்பர்களது உள்ளத்தை உருக்குவது. அம்மையார் தாம் பெற்ற திருவருள் அது வத் தினைத் தன்மை நிலையில் வைத்து உலகத்தார்க்குத் தெளி யவுணர்த்தும் பாடல்களும், தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத் தும் பாடல்களும், தம்மையொத்த அடியார்களின் இயல்பினை விரித்துரைக்கும் பாடல்களும், இறைவனுடைய அருட்கோ லங்களையும் திருவருட் செயல்களையும் நினைந்து அப்பெரு மானை முன்னிலப் படுத்து அழைத்து உரையாடி மகிழும் நிலையிற் பாடப் பெற்ற திருப்பாடல்களும், இறைவனது பொருள் சேர் புகழ்த்திறத்தை யாவரும் உணர்ந்து போற் றும் வண்ணம் அப்பெருமானைப் படர்க்கையில் வைத்துப் போற்றும் பாடல்களும் இதன்கண் அமைந்துள்ளன.

எம்பெருமானுராகிய இறைவர் எனக்குண்டாகிய இடையூறுகளை நீக்காராயினும் யான் படுந் துன்பத்திற்கு உளமிரங் தாராயினும் துன்பங்களை விலக்கியுய்ந்து போதற் குரிய நல்வழியைக் காட்டாராயினும் எனது நெஞ்சத்தில் நீங்காது வீற்றிருக்கும் அவர் பால் யான் வைத்துள்ள அன்பு ஒருபொழுதும் குறையாது. எப்பொருளிலும் நீக்க மறத் தங்கியிருத்தலால் இறைவன் என்ற காரணப் பெய ருடைய கடவுள், உயிர்களுக்கு உடல், கருவி, உலகு, நுகர்பொருள் என்பவற்றைப் படைத்தளிக்க வல்லவன்.

அவற்றை மீண்டும் ஒடுக்குதலைச் செய்பவனும் அவ்விறை

1. அற்புதத் திவந்தாதி 2