பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞா 585

யார்கள் மனத்தால் நினைத்தனவற்றை நினைத்தபொழுதே வரையாது வழங்குதலாற் சிந்தாமணியாகவும், தன் பொருள் சேர் புகழை நாவசரப் பேசுங்கால் தெவிட்டாத இன் சுவை பயத்தலால் வாளுேரமுதமாகவும், தலதாழ்த்து வணங்கும் அன்பர்களது உள்ள த்தைக் கவர்ந்து உவகை தருதலால் ஆருயிர் நாயகளுகவும், இங்ங்னம் இறைவன் தன்னடியார்களுக்கு அருளுந்திறம் பலபல வண்ணங்களா மென்பார், அவனை நினைந்து மால்கொண்ட தலைவி கூற் நில் வைத்து,

சந்தித்த கூற்றுக்குக் கூற்ரும் பிணிக்குத் தனிமருந்தாம் சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம் வந்திக்கின் வந்தெனை மால் செயும் வானுேர் வணங்க நின்ற அந்திக்க ணுடி யரனடியார்களுக் காவனவே. (83)

எனப் பாடிப் போற்றுகின் ருர்.

மக்கள் விரும்பி வேண்டுமியல்பினதாகிய வாழ்நாளிற் ப தி ப் பகு தி உறக்கத்திற்குரிய இராப்பொழுதாய்ப் பயனின் றிக் கழிவது. எஞ்சிய பாதி நாட்களில் நெருங்கி வருத்தும் கொடிய நோய்களும் ஒன்று மறியாப் பிள்ளை மைப் பருவமும் எதுவுஞ் செய்தற்கியலாத முதுமையும் விரவி வருத்துவன. அன்றியும் அச்சம் வெகுளி அவா பொருமை முதலிய தீக்குணங்கள் பல செறிந்து உள்ளம் உரை செயல்களை மாசு படுத்துவன. ஆதலின் இங்ங்னம் துயரி லங்கும் உலக வாழ்வினைப் பற்றுக்கோடாக எண்ணிச் சாராது என்றும் நிலைபேறுடைய இறைவன் திருவடிகளைச் சார்ந்து உய்திபெறுவோமாக என உலக மக்களை அழைத் துக் கூறும் அறிவுரையாக அமைந்தது,

வேண்டிய நாட்களிற் பாதியுங்கங்குல் மிகவவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளை மை மேலது.மூப் பாண்டின அச்சம் வெகுளி அவா அழுக்கா றிங்கனே மாண்டன சேர்தும் வனர் புன் சடை முக்கண் மாயனையே 199)

என்ற பாடலாகும்.

வழிபட வேண்டுமென்னும் பேரன்பிளுல் நெஞ்சங் குழைந்து தளிர்க்கவும் கண்களினின்று அன்புநீர் ததும்பி வழியவும் முகம் தாமரை மலரின் பொலிவுடையதாக விளங் கவும் அழகிய சிவந்த மலர் போலும் கைகள் குவிய எட்டுறுப்பும் நிலத்திற் பொருந்த வீழ்ந்து திருவடிகளைப் பணிந்து தம் சொற்களாகிய மலர்களால் அருச்சித்து வழி