பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612

பன்னிரு திருமுறை வரலாறு


எவ்வுருவில் யாரொருவர் உள் குவா ருள்ளத்தே அவ்வுருவாய்த் தோன்றி யருள் கொடுப்பான்-எவ்வுருவும் தாணேயாய் நின்றளிப்பான் தன் னிற் பிறிதுருவம் ஏனுேர்க் குங் காண்பரிய எம்பெருமான் 3 *

என வரும் தொடராற் சிவபெருமானது முழுமுதற் றன்மை யினைச் சேரமான பெருமாள் நாயனுர் விளக்கிய திறம் உணர்ந்து இன்புறத் தக்கதாகும். பிறவாதே தோன்றிய பெம்மான் தனனை நோக்காதே யெவ்வளவும் நோக்கி ஞனை துறவாதே கட்டறுத்த சோதியான ஆரொருவ ருள்குவா ருள் ளத்துள்ளே அவ் உருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும் என வரும் திருநாவுக்கரசர் வாய் மொழிகளை உளத்துட் கொண்டு,

பிறவாதே தோன்றின்ை காணுதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான்............ எவ்வுருவில் யாரொருவ ருள் குவா ருள்ளத்தே அவ்வுருவாய்த் தோன்றி யருள்கொடுப்பான்

எனவும்,

அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண் புணர மாட்டேன்

என வரும் அம்மையார் வாய்மொழியை யுளத்துட்கொண்டு,

அரியாகிக் காப்பான் அயய்ைப் படைப்பான்

அரஞ யழிப்பவனுந் தானே

எனவும் இறைவனது இயல்பினை விரித்துக் கூறிய திறம் ஒப்பு நோக்கி மகிழத்தக்கதாகும். இங்ங்னமே சேரமான் பெருமாள் நாயனுர் தமக்கு முன் வாழ்ந்த திருமுறையாசிரி யர்கள் அருளிய பொருளுரைகளை இவ்வுலாவிற் பல விடங்களிலும் எடுத்தாண்டுள்ளார்.

மடந்தைப் பருவத்தினளாகிய பெண்ணின் வனப்பினை விளக்கக் கருதிய சேரமான் பெருமாள் நாயனுர், ஒள்ளிய தீந்தமிழின் தெய்வ வடிவாள் எனப் புனை ந்துரைத்தலை யுற்று நோக்குங்கால், தமிழ் ஒண்மை யும் இனிமையுமுடைய மொழி யென்றும், தெய்வத் தன்மை வாய்ந்த மொழி யென்றும் உலக மக்களுக்கு அறிவுறுத்துதல் அவரது நோக்கமென்பது நன்கு விளங்கும்.