பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624

பன்னிரு திருமுறை வரலாறு


தவராகிய நிரம்ப அழகிய தேசிகரும் தாம் பாடிய திருப் பரங்கிரிப் புராணத்து நக்கீரச் சருக்கத்திற் குறிப்பிட வில்லை. திருப்பாங்குன்றத்திற் பூதத்தாற் சிறையிடப் பட்டு வருந்திய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி முருகனருள் பெற்ருசென்னும் மற்ருெரு புதுக்கதையினை நிரம்ப அழகிய தேசிகர் தமது நூலிற் குறித்துள்ளார். நக்கீரரைப் பற்றித் திருவிளையாடற் புராணத் கிற் சொல்லப் பட்ட கதை நிகழ்ச்சிகளையும் திருப்பரங்கிரிப் புராணத்திற் கூறப்பட்ட கதை நிகழ்ச்சியையும் தொகுத்து நோக்கிய துறைமங்கலம் சிவப்பி காச சுவாமிகள், நக்கீசர் இறைவ னுெடு வாது செய்தமையால் குட்ட நோயினைப் பெற்று இறைவன் பணித்த வண்ணம் அந்நோய்தீரத் திருக் கயிலாயத்தைத் தரிசிக்க வெண் ணி வடநாட்டுத் தலங்களை வணங்கிச் செல்லும் வழியில் ஒரு பூதத்தாற் பற்றப்பட்டு மலைமுழையில் அடைக்கப்பட்டுத் துன்புறும் நிலையில் திருமுருகாற்றுப்படையினைப் பாடி முருகனருளாற் சிறை நீங்கியுய்ந்து அப்பெருமான் பணித்த வண்ணம் அங்குள் ள தொரு தடாகத்தில் மூழ்கிப் பொன் முகலியாற்றில் நோய் நீங்கிய தூய வுடம்புடன் எழுந்து திருக்காளத்தியாகிய தென் கயிலாயத்தைக் கண்டு கயிலை பாதி காளத்தி பாதி யந்தாதி பாடினர் என மற்ருெரு புதுக்கதையை உருவாக்கி யுள்ளார்.

நக்கீரனுராகிய சங்கப்புலவரது வரலாற்றினை விரித் துரைக்க விரும்பிய இப்பெருமக்கள், திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் மேற்கொண்ட உண்மை வரலாற்று நெறிமுறையைப் பின்பற்றி, நக்கீரர் பாடல் களிற் காணப்படும் அகச்சான்றுகளையும் அவரைப்பற்றி அவர் காலத்துப் பெருமக்கள் கூறியனவாகிய புறச் சான்று களையும் ஆதரவாகக் கொண்டு நூல் செய்திரு பின் அந் நூல்கள் தமிழ்ப் பெருமக்கள் வரலாறுகளை யறிதற்குப் பெரிதும் உதவி செய்திருத்தல் கூடும். இவ்வாசிரியர்க ளெல்லோரும் வரலாற்று நெறியிற் கருத்தின்றி மக்களது மனவியல்புக்கும் இறைவனது திருவருள் நெறிக்கும் முரணுகப் பிற்காலத்தார் சிலர் புனை ந்துரைத்த வடமொழித் தலபுராணங்களையும் காலந்தோறுந் திரிபுற்று வழங்கிய புனைந்துரைக் கதைகளை யும் மெய்யென நமபி நூலியற்றி யுள்ளார்கள். புலமை நிரம்பிய இப்பெருமக்கள் பாடிய