பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626

பன்னிரு திருமுறை வரலாறு


பாவித்து, பிரமன், பிராணி, புண்டரிகம், போனகம், மாயம், மானுட வர், முத்தி, மூர்க்கமாக்கள், மூர்த்தி, வாசகம், விடம், விண்ணப்பம் முதலிய வடசொற்களும் பிற்காலச் சொல்வழக்குக்களும் பெருகிக் காணப்படு கின்றன. அன்றியும் இப்பிரபந்தங்களில் கண்ணப்பர் வரலாறு, சண்டீசர் சரிதம், அருச்சுனற்குப் பாசுபத மளித்தது, சிலந்தியைக் கோச்செங்களுகைப் பிற பித் தருளிய சிறப்பு, மார்க்கண்டேயர் கதை, உபமன்னிய முனிவர்க்குப் பாற் கடவீந்தது, சாக்கிய நாயஞர் வரலாறு, நந்திக்கு அருளியது, புலிக்கால் முனிவர், பிங்கிருடி முதலியோர்க்கு அருள் செய்தது, திருமால் பிரமர் அடிமுடி தேடியது, கடவூரிற் காலனையுதைத்தது, காமனையெரித் தது, முயலகனை மிதித்தது. தாருகனைக் கொன்ற காளியின் வேகந்தவிர்த்தது, நாமகளை மூக்கரிந்தது, திரிபுரத்தவுணர் மூவர்க்கு அருள் செய்தது, அந்தகாசுரனைக் கொன்றது, யானையையுரித்தது, ஆலின் கீழ் நால்வர்க்கு அறமுரைத் தது முதலிய புராணச் செய்திகளும் பிற்கால வரலாறுகளும் பேசப்படுகின்றன.

திருமுருகாற்றுப்படையில் தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள் மேற்கொண்டு போற்றிய பழைய வழிபாட்டு முறை களே விரித்து விளக்கப்பெற்றிருக்கவும், நக்கீ தேவர் பாடிய திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தில் ஆகமச் செயல் முறைகளே விரித்துரைக்கப்பட்டுள்ளன. திருமுரு காற்றுப்படை. செறிவுந்திட்பமும் வாய்ந்த சொன்னடை யில் அமைந்திருக்கவும் நக்கீரதேவர் பிரபந்தங்கள் இளகிய எளிய நடையில் அமைந்துள்ளன. அன்றியும் நக்கீரதேவர் பாடல்களில் தேவார திருவாசகச் சொற் ருெடர்களும் கருத்துக்களும் அவ்வாறே யெடுத்தாளப் பெற்றுள்ளன. ஆகவே கயிலை பாதி காளத்தி பாதி யந்தாதி முதலிய பதினெராந் திருமுறைப் பிரபந்தங்களைப் பாடிய நக்கீரதேவரென்பார், திருமுருகாற்றுப்படை யாசிரியரும் கடைச்சங்கப் புலவருமாகிய மதுரைக் கணக்காயனுர் மகளுர் நக்கீரனுரல்லர் என்பதும், தேவார ஆசிரியர் மூவர்க்கும் காலத்தாற் பிற்பட்ட மற்ருெருவரென்பதும் நன்கு தெளியப்படும்.

。多上 திருவிங்கோ மலத் திருக்கோயிலிற் கருப்பக் கிருகத் தின் வடபுறத்திற் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்ட்ொன்