பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 629

பெற்றிருத் தலையும் நோக்குமிடத்து இவ்வாசிரியர் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டினை யொட்டியதென்பது நன்கு உய்த்துணரப்படும்.

இவ்வாசிரியர் திருக்காளத்தி, திருவீங்கோய்மலை, திருவலஞ்சுழி ஆகிய திருத்தலங்களைப் போற்றிப் பிரபந் தங்கள் பாடியிருத்தலையும் இவர் பாடிய பிரபந்தங்களில் திருவாலவாய், திருமறைக்காடு, திருவண்ணுமலை ஆகிய திருத்தலங்கள் குறிக்கப்பட்டிருத்தலையும் நோக்குங்கால் இவர் மேற்குறித்த திருத்தலங்களில் பல நாட்கள் தங்கி யிருந்து சிவபெருமானை வழிபட்டவரென்பது நன்கு பெறப் படும். இவர் பாடிய திருவெழு கூற்றிருக்கையென்னும் பிரபந்தத்தின் இறுதியிலே,

பணிந்தேனின் பாதம் பரமேட்டி பால் நீ றணிந்தால வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல் மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே ஐயுறவொன் றின்றி யமர்ந்து.

என்ற செய்யுள் காணப்படுகின்றது. இதன்கண் மெய் யெரிவு எனக் குறிக்கப்படுவது வெப்புநோய்போல்வ தோர் உடற்பிணியாகும். இந்நோயால் வருந்திய நக்கீர தேவர் திருவாலவாயிறைவனைப் பணிந்து திருவெழு கூற்றிருக்கையென்னும் பிரபந்தத்தைப்பாடி நோய் நீங்கி யின் புற்ருர் எனக்கருதுதல் பொருத்தமாகும். 'கொங்குதேர் வாழ்க்கை யென்ற பாடலுக்கு நக்கீரர் குற்றங் கூறியது கண்டு சினமுற்ற இறைவர் நெற்றிக்கண்ணைக் காட்ட அவர்தம் கண்ணழலால் நக்கீசர்க்குண்டாகிய அழற்சியே இப்பாடலில் மெய்யெரிவு எனக் குறிக்கப்பட்டதெனக் கருதுவர் சிலர். பிற்காலத்தாராற் புனைந்துரைக்கப்பட்ட இக்கதை நக்கீர தேவரது மனநிலை க்கும் இறைவனது அருளியல்புக்கும் முற்றிலும் மாறுபட்டிருத்தலால் இக்கருத் தினை உண்மையெனக்கொள்ளுதற்கில்லை.

இனி, தருமியின் பொருட்டு இறைவன் பாடித்தந்த கொங்குதேர் வாழ்க்கையென்ற தமிழ்ச்செய்யுளை நக்கீரர் பழித்த ைரென்பதற்கு,

கூடலாலவாய்க் குழகளுவ தறியா தருந்தமிழ் பழித்தன னடியேன். '