பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628

பன்னிரு திருமுறை வரலாறு


வாழ்க்கை வரலாற்றினைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை. நக்கீர தேவர் என இவர்க்கு வழங்கும் பெயர் மதுரைக்கணக்காய ர்ை மகளுர் நக்கீரனராகிய பழைய சங்கப் புலவரது பெயரை யொட்டி இவர்க்குப் பெற்ருேரா லிடப்பெற்று வழங்கியதெனத் தெரிகிறது. இது போலவே இப் பதினெராந் திருமுறையிற் குறிக்கப்பெற்ற கல்லாட தேவர், கபில தேவர், பரண தேவர் எனவரும் பெயர்களும் கடைச்சங்கப்புலவர்களாகிய கல்லாடர், கபிலர், பரணர். என்னும் பெருமக்களை நினைவுகூர் தற்பொருட்டு அவர்தம் பெற் ருேர்களால் இடப் பெற்று வழங்குவனவென்றே கொள்ளத்தக்கன. இளமைப்பருவத்தே நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் எனச் சங்கப்புலவர் பெயர்களால் அழைக்கப்பெற்று வந்த இவர்கள், திருவருட் புலமையிற் சிறந்து இப்பதினுெராந் திருமுறையிலுள்ள பிரபந்தங் களைப் பாடிய காலத்தில் தெய்வத்தன்மையை விளக்குதற் குரிய தேவர் என்னும் சிறப்பினையும் பெற்று நக்கீர தேவர், கல்லாட தேவர், கபில தேவர், பரண தேவர் என உலக மக்களால் அழைக்கப்பெற்ருர்களெனக் கொள்ளுதல் ஏற் புடையதாகும். தேவார ஆசிரியர் காலத்திற்குப்பின் தோன்றிய இப்பெருமக்கள் பண்டைநாளில் வாழ்ந்த சங்கப்புலவர் பெயர்களைத் தமக்குரியனவாகக்கொண்டு திகழ்தலை நோக்குங்கால் இவர்கள் வாழ்ந்த காலப்பகுதி யில் தமிழ் மக்களிடையே சங்கப் புலவர்கள் செய்த தமிழ்த் தொண்டுபற்றிய மனவெழுச்சி தோன்றியதென்பதும் தம் பிள்ளைகளுக்குப் பண்டைத் தமிழ்ப் புலவர்களின் பெயரை இட்டு அழைக்கு முகமாக அப் புலவர்பெருமக்களது புலமைத்திறத்தில் தம்மக்களை ஈடுபடுத்தல் வேண்டுமென் னும் பெருவேட்கை அக்காலத் தமிழ் மக்களிடையே நில வத் தொடங்கிய தென்பதும் நன்கு புலனும். எனவே நக்கீர தேவராகிய இவ்வாசிரியர் நல்ல தமிழ்ப்பற்றுடைய குடும்பத்திற் பிறந்து வளர்ந்து தமிழ்ப்புலமையிற் சிறந்தன ரெனக் கொள்ளுதல் மிகவும் பொருந்துவதாகும். திருவீங் கோய்மலையிற் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டில் நக்கீர தேவராகிய இவ்வாசிரியர் தேவார ஆசிரியர் மூவர்க்கும் பின்னே குறிக்கப்பெற்றிருத்தலையும் பதினுெராந் திரு முறையிற் சேரமான் பெருமாளருளிய பிரபந்தங்களின் பின்னே இவருடைய பிரபந்தங்கள் முறைப்படுத்தமைக்கப்