பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658

பன்னிரு திருமுறை வரலாறு

இரண்டி னிக்கி யொன்றி னென்ற விரண்டு மில் லோர்க்கு முந்நெறி யுலகங் காட்டினை யந்நெறி நான் கென ஆழி தோற்றினை வாள் செலும் ஐந்தலை யரவரைக் கசைத்தனை நான்முகன் மேன்முகக் கபால மேந்தினை நூலின் முப்புரி மார்பினை மூவா மேனியை இருவரை குடையா வேந்திய வாற்றல் ஒருபெருங் கடவு ளொருவ ஞயினை யாங்கு நிற் காணு திருவரு மூவுல கியைந்துடன் றிரிதர நாற்றிசை, ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை யாறுநின் சடைய தைந்துநின் றுறையே நான்கு நின் வாய்மொழி மூன்று நின் கண்ணே யிரண்டு நின் படையே யொன்று நின் னேறே யொன்றியல் காட்சி யுமையவள் நடுங்க விருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கிய முத்தி நான் மறை யைம்புல னடக்கிய அறுதொழிலாளர்க் குறு துயர் தீர்த்தனை ஏழிய லின்னரம் பியக்கினை தாழா வாறின் னமுதம் பயந்தனை யைந்தினில் வீறுமா கோவை விழுத்தக வேந்தினை யால நீழ லருந்தவர்க் கறநெறி நால்வர் கேட்க நன் கினி துரைத்தனை நன்றியின்,

முந்நீர்ச் சூர்மா முரணறக்கொன்றங் கிருவரை யெறிந்த வொருவன் ருதையை

யொருமிடற்றிருவடி வாக்கினை தரும

மூவகை யுலகுட னுணரக் கூறினை நால்வகை யிலக்கண விலக்கிய நலம்பட மொழிந்தனை யைங்கனைக் காமற்காய்ந்தனை அறுவகைச் சமயமு நெறியுளி வகுத்தனை ஏழினேசை யிராவணன் பாடத் தாழாக் கேட்டவன் றலே நனிபொருந்தி யாறிய சினத்தை யாகி யைங்கதித் தேரொடு மற்றவன் செல் கென விடுத்தனை நாற்ருேள் நளனே நந்திபிங் கிருடியென் ருற்ற ற் பூத மூன்றுடன் பாட விருகண் மொந்தை யொருகண் கொட்ட மட்டவிழ் கோதை மலைமகள் கான நட்ட மாடிய நாதனி யதளுல்

1. வீறுயர் கோவை. பா. வே.