பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் - 登窑

திருவாதவூரடிகள் பாண்டிய மன்னன்பால் அமைச் சுரிமை பூண்டொழுகியவரென்பது, அவரது வரலாறு கூற வந்த எல்லாப் புராணங்களிலும் தெளிவாக விளக்கப்பெறும் செய்தியாகும்.

ஈண்டிய மாயா விருள் கெட எப்பொருளும் விளங்கத்

தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லனல்லன் எனவும், -

மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே எனவும்,

நாகொடு சுவர்க்க நானிலம் புகாமல்

பரகதி பாண்டியற் கருளினை போற்றி எனவும் வரும் திருவாசகத் தொடர்களை ஊன்றி நோக்குங் கால் வாதவூரடிகள் தம் காலத்து ஆட்சி புரிந்த பாண்டிய னுடன் நெருங்கிய தொடர்புடையவரென்பது நன்குபுலளும்.

பாண்டியனுக்கு அமைச்சுக்கடன் பூண்ட வாதவூரர், அம்மன்னன் பணித்தவண்ணம் குதிரை வாங்குதற்கென நிறைந்த பொன்னைப் பெற்றுக்கொண்டு கீழ்கடற்றுறையை நாடிச் செல்லும்பொழுது, வழியிடையே திருப்பெருந்துறை யென்னுந் தலத்திலே சிவபெருமான், அடியார்களாகிய மாளுக்கர்கள் புடைசூழ அந்தணராய் ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருந்து மன்னவனமைச்சராகிய வாத வூரரை அருள்நோக்கால் அழைத்தருளித் தீக்கை செய்து திருவைந்தெழுத்தின் உட்பொருளை உபதேசித்தருளினர் என்னும் இச்செய்தியினை,

தெங்கு திரள் சோலேத் தென்னன் பெருந்துறையான் அங்கனன் அந்தணகுய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மாளுய் எனவும்,

எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றணுய்ச் சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் எனவும்,

தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன் கருனேத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாமேலே வீடெய்த ஆட்டான் கொண் டாண்டவா பாடு - ம் எனவும்,