பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பன்னிரு திருமுறை வரலாறு


திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல்களே மாணிக்க வாசகம் ' என்றபெயரால் உமாபதி சிவம் குறித்துப் போற்றி யுள்ளமை காணலாம். இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங் கால் திருவாசகத்திற்கு வழங்கிய மாணிக்கவாசகம் என்ற இப்பெயரின் அடியாகவே இத்திருமுறையை அருளிச் செய்த திருவாதவூரடிகளுக்கு மாணிக்கவாசகர் என்ற சிறப்புப் பெயரும் தோன்றி வழங்கியதென்பது நன்கு புலனும். இப்பெயர்க்காரணத்தை மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் திருப்பெருந்துறைப் புராணம் உபதேசப்படலத்தில்

  • மன்ன நன்மணியே வார்த்தையாய்த்திரண்டு

வருமொரு காரணக்குறியால் அன்ன மாணிக்க வாசகரெனும்பே

ராகவின் ருதியென் றறைந்தார் .

எனவரும் தொடரில் தெளிவாகவிளக்கியுள்ளமை இவண் கருதத்தகுவதாகும்.

திருவாதவூரர் உலக நூற்கல்வியும் அறிவனுாற்கல்வியும் ஆகிய இருதிறமும் ஒருங்கு பயின்றவர் என்பது அவர் அருளிச் செய்த திருப்பாடல்களில் வரும் பலவகைக் குறிப்புக்களால் இனிது விளங்கும். வாதவூராது கல்வித் திறத்தை நன்குணர்ந்த பாண்டியன் அவரைத் தனது ஆட்சியில் அமைச்சராக அமர்த்திக் கொண்டான் என்ற செய்தி அவருடைய வரலாறு கூறும் புராணங்கள் எல்லா வற்றிலும் சிறப்பாகக் குறிக்கப்பெற்றுளது. இங்கனம் வாதவூரரை அமைச்சராக அமர்த்திக்கொண்ட பாண்டியன் இன்ஞனென்பது தெளிவாக விளங்கவில்லை. இப்பாண்டிய மன்னனை அரிமர்த்தனன் என்ற பெயரால் பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுவர். இவர் கூறுமாறு அரிமர்த்தனன் என்ற பெயருடைய மன்னன் பாண்டி நாட்டை ஆட்சி புரிந் தான் என்பதற்குரிய கல்வெட்டாதரவோ பிற சான்றுகளோ இதுகாறும் கிடைக்கவில்லை. எனவே அரிமர்த்தனன் என்ற இப்பெயரை வாதவூரடிகள் காலத்து வாழ்ந்த மன்னனது இயற்பெயராகக் கொள்ளுதற்கு இடமில்லை. பகைவர்களே அழித்தோன் என்னும் கருத்துப்பட அரிமர்த்தனன் எனப் பிற்காலத்தவர் அம்மன்னனுக்கு இட்டு வழங்கிய புனைபெய ரெனவே இதனைக் கருதவேண்டியுளது.