பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682

பன்னிரு திருமுறை வரலாறு


அதனைப் பெறலரும் பரிசில் என்றும் நக்கீரனுர் குறித்த

திறம் நினைந்து மகிழத் தக்கதாகும்.

கந்தழியைப் பெற்ருளுெருவன் அதனைப் பெருதான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவானென்பது பற்றி நக்கீரனர் இத்திருமுருகாற்றுப் படையைப் பாடியுள்ளாரென்பர் நச்சிர்ைக்கினியர். "கந்தழி யாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள் அது,

சார்பிளு ற் ருேன்ருது தானருவா யெப்பொருட்குஞ் சார் பென நின் றெஞ்ஞான்று மின் பந் தகைத் த ரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையாதா மைதீர் சுடர் என்பதாம் இதனை,

உற்ற வாக்கையினுறுபொருள் நறுமலரெழுதரு

நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் என அதனை உணர்ந்தோர் கூறிய வாற்ருன் உணர்க" என நச்சினர்க்கினியர் கூறிய விளக்கம், இத் திருமுரு காற்றுப்படையும் திருவாசக முதலிய திருமுறைகளும் போற்றும் முழுமுதற் கடவுள் ஒன்றேயென்பதனை இனிது புலப்படுத்துதல் காணலாம்.

இறைவன் திருவடியே உயிர்களுக்கு வீடாயிருக்கும் என்பதனைத் தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாங் காட்டிச் சிவங்காட்டித், தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி ' என வருந் திருவாசகத் தொடரால் திருவாதவூரடிகள் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளார். இங்ங்னம் இறைவனடி சேர்தலே வீடுபேருகும்

என சைவத்திருமுறையாசிரியர்கள் தாம் பெற்ற திருவருள் அனுபவத்தால் உணர்ந்து கூறிய அடிசேர் முத்தியினையே

" சேவடிபடருஞ் செம்மல் உள்ள மொடு நலம்புரிகொள்கைப் புலம் பிரிந்துறையுஞ் செலவு " என வருந் தொடரில் நக்கீரனர் தெளிவாகக் குறிப்பிட்டு § - GT Syss, so a

1. இறைவனடி சேர்தலொன்றையே சிறந்த வீடு பேருகப்

பண்டைத் தமிழ் மக்கள் கருதி வந்துள்ளார்களென்பது திருக்குறள் கடவுள் வாழ்த்தில் இறைவனடி சோதல், தா ள் சேர்தல் எனக் குறிக்கப்படும் சொல் வழக்குக்களால் நன்கு தெளியப்படும்,