பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயகுச் శిష్టిక్షి

இவை அமைந்துள்ளன. இப்பாடல்கள் பத்துப்பாட்டும் உரையும் சேர்ந்துள்ள பழைய ஏட்டுப் பிரதிகளில் இல்லை. திருமுருகாற்றுப்படை மட்டுமுள்ள பிற்கால ஏட்டுச் சுவடி களிலும் பதினுெராந் திருமுறை அச்சுப் பிரதிகளிலுமே உள்ளன. இவ்வேழு வெண்பாக்களையும் அடுத்துக் 'காக்கக்கடவிய நீ பரங்குன்றில் நக்கீரர் தாமுரைத்த’ என்ற முதற்குறிப்புடைய வெண்பாக்கள் மூன்றும் சில ஏடுகளிற் காணப்படுகின்றன. இப்பாடல்கள் மூன்றும் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பித்த பதிளுெராந் திருமுறைப்பதிப்பிலும் திருமயிலை செந்தில் வேலு முதலிய ராவர்கள் பதிப்பித்த பதினுேராந்திருமுறைப்பதிப்பிலும் இடம்பெறவில்லை. நாடோறும் திருமுருகாற்றுப்படையைப் பாராயணஞ் செய்வோரடையும் பயனை அறிவுறுத்துவன வாகிய இப்பாடல்கள் பிற்காலத்தவராற் பாடப்பெற்றன எனக்கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

திருக்கண்ணப்பதேவர் திருமறம்

மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்பது பொருள். தறுகண் மறவரது வீரச்செயலை விளக்கும் புறத்துறை களுள் மறம் என்பதும் ஒன்று. உயர்ந்த புகழைப் பெற விரும்பிப் பலவகை இன்னல்களுக்கிடையே பகைவர் சேனையைத் தடுத்துதிறுத்தும் போர்ச்செயலில் ஈடுபட்ட வீர ைெருவன் பகைவருடைய மாறுபாட்டிற்குப் ப்ொருதவ கிைப் பகைவரது வேல் பாய்ந்தமையால் தன்மார்பின்கண் உண்டாகிய புண்ணைக்கிழித்து இறக்கும் நிலை மறக்காஞ்சி யென்னும் புறத்துறையாகும். காஞ்சித்திணையின் துறை யாகிய இதனியல் பினை,

' பண்புற வரூஉம் பகுதி நேசிக்கிப்

புண்கிழித்து முடியும் மறத்தி குனும்.'

என்ற தொடரால் தொல்காப்பியனுர் இனிது விளக்கி யுள்ளார். நன்ருகிய பண்பு உலகில் நிலைபெறுவதற்கேற்ற வழிதுறைகளை யாராய்ந்து அதன் நிலைபேற்றிற்குச் சிறிதும் பயன்படாத தன்னுயிரைப் போக்கிக்கொள்ள முயலும் வீரனது மனத்திண்மை இத்துறையிற் புலப்படுதல் காணலாம். இப்புறத்துறையைப் பொருளாகக்கொண்டு

1. தொல், பொருள், புறந்திணை 16-ம் சூத்திரம்,