பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690

பன்னிரு திருமுறை வரலாறு


முடிமீது சொரிந்து இறைச்சியினைத் திருவமு தனகப் படைத் தான். காளத்தியிறைவனைக் கண்டு கண்டு உளங்கசிந்து காதலாற் கூத்தாடின்ை. இறைவன் திருவடிகளை அன் பினுல் இறுகப் பற்றிப் பணிந்து பிரிதற்கியலாத பேரன் பினன் ஆளுன்,

அவன் அம்மலையைவிட்டு வேட்டைமேற் சென்ற பின்னர் மறுநாள் வைகறைப் பொழுதிலே நீராடிக் காளத்தியிறைவனை அன்பினுல் வழிபடுங் கடமையுடைய அந்தணன், வந்து பார்த்து நேற்றுத் தான் இறைவனுக்குச் செய்த பூசனை சிதைந்த நிலையினை க் கண்டு, யான் பூசனை செய்த பின்னரும் ஆகம நெறிக்கு முரணுக மறித்தும் இவ் வாறு பூசை செய்தார் யாவர் ' என ஐயுற்று அதன் உண் மையைக் கண்டு தெளிதல் வேண்டி அவ்விடத்தே மறைந் திருந்தான். அந்நிலையில் வேடைெருவன் வருதலைக் கண்டு நடுங்கி அவன் வாய் நீராட்டி ஊன முது படைத்து வழிபட்டதனைக் கண்டு மனம் பொருது வருந்தித் தன் குடிலை அடைந்தான். மறுநாள் விடியற்காலையிலே நீராடி இறைவனைப் பூசித்தற்பொருட்டுக் காளத்திமலை யை யடைந்த அந்தணன், முன் னை நாளிற் போன்று வேட ளு ற் படைக்கப்பட்டிருந்த ஊன் முதலியவற்றை விலக்கித் தூய்மை செய்து நன்னிராட்டிக் காளத்தியிறைவனுக்குப் பூசனை செய்து, 'இறைவா, இந்நிலை உனக்கு அழகாகுமா? நாள் தோறும் நான் செய்யும் பூசனையை இவ்விடத்தே யுள்ள வேடுவைெருவன் நாயொடும் புகுந்து மிதித்துத் தனது செருப்புக்காலால் நின் முடிமீ தணிந்த மலர்களைத் தள்ளித் தன் வாய்நீரை நின்மேல் உமிழ்ந்து தலையிற் கொணர்ந்த சருகிலையை உதிர்த்து இவ் வண்ணமாக நின் திருக்கோயிலில் அநுசிதமாகிய இறைச்சியையும் இட்டுச் செல்கின்ருனே. இச்செயல் இறைவனுகிய நினக்கு என்றும் இனியதுதான ? அவ்வேடன் என்னைக் காணிற் கொன்று விடுவான். அருவருக்கத்தக்க இச்செயலை யாவரும் தடுத்து விலக்கு தற்கியலாத நிலையில் முரண்பட்ட குணத்தகை அவன் உள்ளான் ' எனத் திருக்காளத்தி யிறைவனை நோக்கி முறையிட்டுவிட்டுத் தனது இருப் பிடத்தை அடைந்தான்.

காளத்தியப்பணுகிய இறைவன், தன்னை விரும்பி வழி படும் அந்தணனது கனவிலே பிறை திகழ் சடையும் நீல