பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 591

கண்டமும் மான்மழுவேந்திய கைகளும் நெற்றியிற் கண் ணும் நீறணிந்த திருமேனியும் ஒற்றை வெள் விடையும் உமையொரு பாகமும் உடையவனு கத் தோன்றியருளின்ை. என்பால் பேரன்புடன் பூசனை புரியும் வில்வேட னுடைய குணங்கள் இவையெனக் கேட்பாயாக. அவன் என்பால் அன்புரிமையிற் சிறந்த பெருந்தவ முனிவன் என்பதை நன்குணர் க. அவன் விரும்பியுறையும் இட மெதுவோ அதுவே தவமுனிவர் வாழும் தவவனமாகும். செருப்பணிந்த அவனது அடியே யான் விரும்பியணியும் நறுமலர். அவனது வாயே பொன்னுலாகிய அழகிய திரு மஞ்சனக் குடமாகும். அவ்வாயினுள்ளே தங்கிய நீர் கங்கையாற்றின் நீரெனத் துய்மையுடையதாகும். அவன் வாயிலுள்ள பற்கள் திருமஞ்சன நீர்க்குடத்துள் மந்திரம் ஒதி இடுதற்குரிய நனமணிகளாம். அவ்வாயின கத்து விளங்கும் நாவானது திருமஞ்சன நீரில் இடு தற்குரிய நறுமலராம். அவன் தனது வாய் நீரை என் மேனியில் உமிழுங்கால் அந்நீரொடு தோய்ந்து விளங்கும் அவன் முகத்து மீசையாகிய புன்மயிர் மந்திரவிதிப்படி அமைந்த தருப்பையைக் காட்டிலும் நம் முடிக்கு மிகவும் இனிமை யுடையதாகும். அவன் தலைமுடியிற் கொணர்ந்த சருகிலை தருப்பையினுற் பொதிந்து கொணரப்பட்ட கற்பக மலரே யாம். அவன் எனக்கு அன்பினுற் படைத்த பன்றி முதலிய விலங்குகளின் இறைச்சி பெருந்தவ முனிவர்கள் எனக்குப் படைத்த நெய்யும் பாலுமாகிய துாய திருவமு தின் இயல்பினதாம். வேடனுகிய அவனது செயலைக் குறித்து யான் கொண்ட கருத்து இதுவே. அவனது அன்பின் திறத்தை உனக்குத் தெளிவாகக் காட்டுவேன். நாளை நீ முறைப்படி பூசனையைச் செய்து முடித்த பின் அங்கேயே ஓரிடத்தில் மறைந்திருப்பாயாக’ எனக் காளத்தியிறைவன் அந்தணனுக்கு அறிவுறுத்தி மறைந்தருளின்ை.

துயிலுணர்ந்தெழுந்த அந்தணன், மனத்திற் கூச்சம் அடைந்து வைகறைப் பொழுதிலே நன் னிரிற் குளித்துக் காளத்திமலையை யடைந்து தான் நாள் தோறும் செய்து வருவதாகிய பூசனையை அமைதியாகச் செய்து முடித்து ஒருவர்க்கும் தோன் ருதபடி அங்கு ஒரு பக்கத்தே மறைந் திருந்தான். ஞாயிறு உச்சியையடைந்த நண்பகலிலே கானவர் தலைவனுகிய வேட்டுவன், தான் வேட்டையில்