பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694

பன்னிரு திருமுறை வரலாறு


காண்கின்ருேம். கடைச்சங்கப் புலவரு ளொருவராகிய கல்லாடனர், பாண்டியன் தலையாலங் கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். பொறையாற்றுக் கிழான், அம்பர் கிழான் அருவந்தை என்னும் சோழ நாட்டு வள்ளல்களால் ஆதரிக்கப் பெற்றவர். இவர் பாடியனவாகச் சங்கத் தொகை நூல்களில் பதின்ைகு பாடல்கள் உள்ளன. இவர் வாழ்ந்தது கி. பி. இரண்டாம் நூற்ருண் டிற்கு முற்பட்ட காலப் பகுதியாகும். பதினெராந் திரு முறையாசிரியராகிய கல்லாட தேவரும் கல்லாடம் என்னும் அகப்பொருட் பாடற் கோவையைப் பாடிய கல்லாடரும் தொல்காப்பியச் சொல்லதிகாரவுரையாசிரியர்களு ளொரு வராகிய கல்லாடர் என்பவரும் கடைச்சங்கப் புலவராகிய கல்லாடனரது பெயரைப் புனைந்து வாழ்ந்த பிற்காலப் புலவர்களாவர். தமிழிலக்கியத் துறையிற் கல்லாடர் என்னும் பெயருடன் பேசப்படுவோர் இங்கு எடுத்துக் காட்டிய இந்நால்வருமேயாவர். கடைச்சங்கப் புலவராகிய கல்லாட ஞரது மொழிநடைக்கும் அவரது பெயர் தாங்கிய ஏனை மூவரது மொழிநடைக்கும் வேற்றுமை பெரிதாகலின் சங்கப் புலவராகிய கல்லாடனர் ஏனைக் கல்லாடர் மூவர்க்கும் நெடுங்காலம் முற்பட்டவர் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்த கொள்கையாகும். இனி, பிற்காலத்தினராகப் பேசப்படும் கல்லாடர் மூவரும் ஒரு வரோ இருவரோ அன்றி வெவ்வேறு புலவரோ என்னும் ஐயமும் அறிஞர்களிடையே நிலவக் காண்கின்ருேம். கல்லாட தேவ நாயனர் பாடியதாகப் பதினெராந் திரு முறையில் தொகுக்கப் பெற்றுள்ள திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்ற பிரபந்தத்தையும் கல்லாடர் பாடிய கல்லாடம் என்ற நூலையும் ஒப்பு நோக்குங்கால் அவ்விரு நூல்களும் மொழிநடையிற் சிறிது வேறுபட்டிருத்தல் புலகுைம். அன்றியும் பதினெராந் திருமுறையாசிரியர்களு ளொருவராகிய கல் லாட தேவ நாயனரும் கல்லாட நூலின் ஆசிரியராகிய கல்லாடரும் ஒருவரென்பது உண்மையா யிருக்குமானல் பதினெராந் திருமுறையில் திருக் கண்ணப்ப தேவர் திருமறத்தையடுத்துக் கல்லாடத்தி லுள்ள செய்யுட்களும் சேர்க்கப் பெற்றிருக்கும். திருவாதவூரடிகள் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையை படியொற்றி அறிவனுற் பொருளாகிய சிவசமயச் செய்தி.