பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696

பன்னிரு திருமுறை வரலாறு


சுரமுடையார் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லாடீச் சுரம் என்ற பெயருடைய இத்திருக்கோயில் இப்பொழுது எவ்விடத்துள்ளதெனத் தெரிந்துகொள்ளுதற்கியலவில்லை. கல்லாடீச்சுரம் என்பது ஆதித்தேச்சுரம் இராசராசேச்சுரம் மெய்கண்டீச்சுரம் என்பவற்றைப்போன்று அமைந்த பெயராகும். இராசராசன் கட்டிய திருக்கோயில் இராச ராசேச் சுரம் எனப்பெயரெய்தியது போன்று கல்லாடர் என்ற பெரியவர் அமைத்ததிருக்கோயில் கல்லாடிக் கரம் எனப் பெயசெய்தியதெனக் கருதவேண்டியிருத்தலால், மீஞ்சூர் வரதராசப்பெருமாள் கோயிற் கல்வெட்டிற் குறிக் கப்பட்ட கல்லாடீச்சுரம் என்ற திருக்கோயிலமைந்த இடத்தைத் திருவாசகத்திற் கூறப்பட்ட கல்லாடம் என்ற திருப்பதியென உறுதியாகக் கூறு தற்கிடமில்லை. முற்காலத்தில் கல்லாடம் என்ற ஊரில் வாழ்ந்திருந்தமை பற்றிக் கல்லாடனுர் என வழங்கிய பெயர் பிற்காலத்தில் பலர் க்கும் இட்டு வழங்குதற்குரிய பெயரா யிற் றனவும், கல்லாடம் என்ற திருப்பதியிற் கோயில்கொண்டு விளங்குதல் கருதிக் கல்லாடர் என அவ்வூர் இறைவனுக்கு வழங்கிய பெயர் பின்னர் மக்களுக்கு இட்டு வழங்குதற் குரிய பெயராயிற்றெனவும் இருவகையாகக்கொள்ளுதல் பொருந்தும்.

கல்லாட தேவநாயனர் பாடிய திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்பது முப்பத்தெட்டடிகளாலியன்ற ஆசிரியப் பாவாக அமைந்துளது. கண்ணப்பநாயனரது அன்பின் வழிப்பட்ட வீரச்செயலையுணர்த்துவதாக லின் இது திருக் கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயர்த்தாயிற்று. பரிவின் தன்மை யுருவுகொண்டனைய திண்ணணுர், விலங்கினங்களை வேட்டையாடச் சென்றபொழுது, சிவ பெருமானது திருவுருவாகிய சிவலிங்கத்திருமேனியைக் கண் டு உளமுருகி வாய்க்லசத்தால் மஞ்சன நீராட்டி ஊனமுதருத்தி வழிபட்டார். அங்ங்னம் வழிபட்டுவரும் நாட்களில் ஒரு நாள் இறைவன் அவ்வேடரது அன்பின் திறத்தைச் சிவகோசரியாரென்னும் மறையவர் க்குப் புலப் படுத்தத் திருவுளங்கொண்டு தம் வலக்கண்ணிற் குருதிநீர் வழியச் செய்தமையும், அதுகண்டு நடுக்கமுற்ற திண்ணனர் இறைவன் பால் வைத்த நீங்காத பேரன் பினல் அழுதரற்றித் தம் கையிலுள்ள அம்பில்ை தமது கண்னென்றைத்