பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736

பன்னிரு திருமுறை வரலாறு


திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது என்னும் ஐந்து நூல்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. இப்பிரபந்தங்களிலுள்ள பாடல்கள் யாவும் இனிய ஓசையும் விழுமிய பொருளும் உடையனவாய்ப் படிக்குந்தோறும் சுவை தலங்களைத் தந்து இன்பஞ் செய் வனவாகும். முழுமுதற் பொருளாகிய சிவபெருமான் தில்லைச் சிற்றம்பலம், திருக்கழுமலம், திருவிடைமருது, திருச்கச்சி யேகம்பம், திருவொற்றியூர் முதலிய திருத்தலங்களிற் கோயில் கொண் டெழுந்தருளிய சிறப்பும், ஆட்பாலவராகிய மெய்யடியார்களுக்கு இறைவன் அருள் புரியும் திறமும், பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து கரை காணுது நெடுங்காலமாகத் துன்புற்றுழலும் உயிர்களை அத் துன்பக் கடலினின்றும் இன்பக்கரையிற் கொண்டு சேர்க்கும் இனிய தெப்பமாகத் திகழ்வது இறைவனது திருவடித் துணையேயாமென்பதும், திருவைந்தெழுத்தாகிய மந்திரத் தினை மறவாது ஓதி இறைவனை ச் சிந்தித்து வழிபடுமியல் புடையோர் இல்லறம் துறவறமாகிய எந்த நிலையிலிருந்தா லும் அழிவிலாப் பேரின் பவாழ்வைப் பெற்றின்புறுவரென்ப தும், இறைவனடியார்க்குத் தொண்டுபட்டு வீடுதோறும் பிச்சையேற்றுண்டு திரியும் வாழ்வு வேந்தர் வாழ்க்கை யினும் மேம்பட்ட பெருமிதத்தை விளக்குமென்பதும், உயிர்களின் நலங்கருதி இறைவன் உலகங்களைத் தோற்று வித்துக் காத்து ஒடுக்கி அருள்புரிவன் என்பதும் முதலிய உயர்ந்த உண்மைகள் இப்பிரபந்தங்களில் தெளிவாக அறிவுறுத்தப்பெற்றுள்ளன. இப்பனுவல்கள் திருவெண் காட்டடிகளது செந்தமிழ்ப் புலமையினையும் நுண்ணறிவின் மாட்சியினையும் உலகியல் வாழ்வில் அவர் பெற்ற சிறந்த அனுபவங்களையும் திருவருட் பேற்றினையும் இனிது புலப் படுத்துவனவாதல் உணர்ந்து மகிழ்தற்பாலதாகும்.

சிறந்தோளுயெ இறைவன் எழுந்தருளியிருக்குமிடம் கோயில் எனப்படும். சிவநெறிச் செல்வர்களாற் கோயில் எனச் சிறப்பித்துப் போற்றப்பெறுவது பெரும் பற்றப் புலியூ ராகிய தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலேயாம். உல கெலாம் உணர்ந்து ஒதற்கரிய இறைவன் அளவில் பேரொளி திகழ ஐந்தொழிற்கூத்தியற்றி எவ்வுயிர்க்கும் அருள் சுரக்கும் பேரருள் நிலையமாகிய தில்லையம்பலத்தைப் போற்றுங் கருத்துடன் திருவெண்காட்டடிகள் பாடிய