பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 735

கொண்டு பட்டினத்துப் பிள்ளையார் புராணம், திருவெண் காட்டடிகள் சரித்திரம், புலவர் புராணம் என்னும் நூல் களில் திருவெண் காட்டடிகள் வரலாருகச் சொல்லப்பட்ட செய்திகள் அடிகளது உண்மை வரலாருகக் கொள்ளத் தக்கன அல்ல எனத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும்.

திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில்,

  • வித்தகப் பாடல் முத்திறத்தடியரும்

திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்

விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று புரிகுழற் றேவியைப் பரிவுடன் ஈந்த பெரிய அன்பின் வரகுண தேவரும் ' என இறைவனது பேரருள் பெற்ற பெருமக்களாகத் தேவார ஆசிரியர் மூவரையும் திருவாதவூரடிகளையும் வரகுண பாண்டியரையும் திருவெண்காட்டடிகள் குறிப் பிட்டுப் போற்றியுள்ளார். இங்குப் பெரிய அன்பின் வர குண தேவர் ' என அடிகளாற் பாராட்டிப் போற்றப் பெற்றவர் கி.பி. எட்டாம் நூற்ருண்டின் இறுதியிற் பாண்டி நாட்டையும் சோழ நாடு தொண்டை நாடுகளையும் ஆட்சி புரிந்த வேந்தர்பெருமாளுகிய முதல் வரகுண பாண்டிய ராவர். திருவெண் காட்டடிகள் வரகுண பாண்டியரது சிவபத்தியின் திறத்தைத் தம் பாடலிற் குறித்துப் போற்று தலை நோக்குங்கால் அடிகள் காலத்தில் வரகுண பாண்டிய ரது அன்பின்திறம் தமிழ் மக்களால் மறவாது போற்றப் பெற்று வந்தமை நன்கு புலனும், கி. பி. பத்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியருளிய பிரபந்தங்களுக்கு முன்னே திருவெண்காட்டடிகள் அருளிய பிரபந்தங்கள் பதினுெராந் திருமுறையில் வரிசைப்படுத்தப் பெற்றிருத்தலை நோக்குங்கால் அடிகள் நம்பியாண்டார் நம்பிக்குக் காலத்தால் முற்பட்டவரென்பது நன்கு விளங்கும். ஆகவே திருவெண்காட்டடிகள் வாழ்ந்த காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியும் பத்தாம் நூற்ருண்டின் தொடக்கமுமாம் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

இனி, அடிகள் அருளிச் செய்தனவாகப் பதினெராந் திருமுறையில் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதுார் மும்மணிக்கோவை,