பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் ?德5

அவ்வழியே செல்வாளுெருவன் அதன்கண் தங்கி இளைப் பாருது உடல் வியர்க்கக் கடுவெயிலில் நடந்து வருந்துதல் நிழலின் குற்றமன்று. என இவ்வாறு சார்ந்தவர்க்கு நலஞ்செய்யும் சங்கரளுகிய இறைவன் எவ்வுயிர்க்கும் தன்னருளை உரிமைப்படுத்தி வைத்துள்ள திறத்தையும் அப்பெருமான நினைந்து உய்தி பெருத தீவினையாளர் களது அறியாமையையும் கூறி இரங்குவதாக அமைந்தது, இம்மும்மணிக்கோவையின் பதினரும் பாடலாகும்.

இறைவனது திருநாமமாகிய திருவைந்தெழுத்தை

யோக ஞானங்களால் முதிர்ந்த துறவிகள் ஓதினுலும் அன்றி மனைவி மக்களொடுவாழும் ஏனையோர் ஓதினுலும் அவ்விருதிறத்தாரும் இறைவனருளில் திளைத்தலுறுதி யென்பது திருவெண்காட்டடிகள் கருத்தாகும். உடல் வலியிற் சிறந்தாைெருவளுல் உயர வீசியெறியப்பட்டு விரைந்து சென்ற கல்லும், வலியில்லாதாளுெருவணுல் வீசப்பட்டுத் தாமதித்து மேலே சென்ற கல்லும் நிலத்தின் இயல்பாகிய ஈர்ப்பாற்றலால் நிலத்தின் கண் ஒருங்கு விழக் காண்கின் ருேம். அதுபோல இறைவனது திருநாமமும் தன்னையோதுவாரது ஞானத்தின் வன்மை மென்மை காரணமாக மாறுபடாது தனக்கு ஆதாரமாகிய இறைவ னருளால் ஈர்க்கப்பட்டு ஒதுவாரனைவர்க்கும் ஒப்ப நலஞ் செய்யுஞ் சிறப்புடைத்தென்பதனை,

வல்லா ளுெருவன் கைம்முயன் றெறியினும்

மாட்டா ஒருவன் வாளா எறியினும்

நிலத்தின் வழாஅக் கல்லேபோல்

நலத்தின் வழார் நின் நாமம் நவின்ருேரே. எனவருந் தொடரால் அடிகள் விளக்கிய திறம் வியந்து போற்றத்தக்கதாகும்.

இறைவனை வழிபட்டு வரம் பல பெற்ற வானவர் முனிவர் அடியார்கள் இன்னின் ெைரனக் குறித்துப் போற்றுவது, இம் மும்மணிக்கோவையின் இருபத் தெட்டாம் செய்யுளாகும். இதன்கண்

வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்

அத்தகு செல்வத் தவமதித் தருளிய சித்தமார் சிவ வாக்கிய தேவரும்