பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 76.1

குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், நற்குன்றம், திருவிற்பெரும்பேறு, புலிவலம், வில்வலம், திருக்காரிகரை, திருப்போந்தை, முக்கோணம் என்பவை வைப்புத் தலங்க ளெனக் கொள்ளத் தக்கன.

உடன்போக்கிற் சென்ற தலைவன் தன்னுடன் வரும் தலைவிக்குக் காஞ்சி நகரத்தின் எழில் நலங்களைக் காட்டிக் கூறுவன வாக அமைந்தன 75 முதல் 85 வரையுள்ள பாடல்களாம். காஞ்சி நகரத்தின் எழில்நலம் அந்நகரி லுள்ள திருக்காமக் கோட்டம், கச்சி அறச்சாலை, ஊரகம் பாடகம் முதலிய திருக்கோயில்கள் ஆகியவற்றைத் திரு வெண்காட்டடிகள் தாம் நேரிற் கண்ட வண்ணம் இத்திருப் பாடல்களிற் சொல்லோவியஞ் செய்துகாட்டிய திறம் உணர்ந்து மகிழத் தக்கதாகும்.

உடன் போக்கில் தலைவியை உடனழைத்துச் சென்ற

தலைவன் காஞ்சி நகரத்தை யடைந்து அங்கு உமையமை யார் வெண்மணலாற் சிவலிங்கம் அமைத்து இறைவனை வழிபட்ட காலத்துப் பெரு வெள்ளம் பெருக்கெடுத்துவரக் கண்டு அஞ்சித் தான் வழிபடும் சிவலிங்கத் திருமேனிக்கு ஊறுநேர வண்ணம் தழுவிக்கொள்ள, அந்நிலையில் உமாதேவியாரது தனத்தழும்பும் வளைத்தழும்பும் தன் திருமேனியில் விளங்கச் சிவபெருமான் குழைந்து காட்டிய பேரன் பின் திறத்தைத் தன்னுடன் வரும் தலைவிக்கு எடுத்துரைத்து இத்தகைய திருவேகம்பத் திருக்கோயிலை இறைஞ்சப் பெற்றமையால் இவ்வுலகில் மக்கட் பிறப்பினு லடைதற்குரிய பெரும் பயனை நாம் பெற்றுள்ளோம் என உண் மகிழ்ந்துரைப்பதாக அமைந்தது,

தளராமிகு வெள்ளங் கண்டுமை யோடித் தமைத்தழுவக்

கிளை யார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார்

வளமாப் பொழில் திரு வேகம்பம் மற்றிது வந்திறைஞ்சி

உள ரா வது படைத்தோம் மடவாய் இவ்வுலகத்துளே. என்ற பாடலாகும். அன்பின் திறத்தாற் பிரிவின்றியுடன் சென்ற காதலர்கள், பிரியா நங்கையாகிய பெருமாட்டியார் வழிபட அன்பேயுருவாகிய பெருமான் அவர்க்கு அருள் செய்த திருக்கோயிலாகிய திருவேகம்பத்தைக் கண்டு வழி பட்டு மகிழ்ந்த திறம் இத் திருப் பாடலில் இனிது புலனுதல் 等矿颂了毫。