பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760

பன்னிரு திருமுறை வரலாறு


தாதியில் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் திருவாத வூரடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவையை நினைவுபடுத்துவனவாக வுள்ளன.

உடன்போக்கில் தலைவளுெடு சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலித்தாய், தன் மகளும் அவள் காதலனும் போலவே வழியில் எதிர்ப்பட்ட காதலர்களாகிய அயலார் இருவரைக் கண்டு தும்மையொத்த அன்பினராகிய இருவர் இவ்வழியே போகக் கண்டீரோ என வினவு கின்ருள். அதுகேட்ட தலைமகன், இறைவன் ஊர்ந் தருளும் ஆனேற்றினையொத்த ஆற்றல் மிக்க தலைமகனைக் கண்டேன். நும்மால் வினவப்பட்ட இருவருள் மற்ருெரு வரை என்னுடன் வரும் மாளுேக்கினளாகிய இம் மங்கையைக் கேட்டுத் தெரிந்துகொள் மின்' என மறு மொழி கூறுகின் ருன். இவ்வழகிய காட்சியை,

துணையொத்த கோவையும் போலெழிற் பேதையுந்

தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ

டேகினரே அணையத்தர் ஏ ருெத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னெடும்

பேசுமினே, எனவரும் பாடல் நன்கு புனைந்துரைத்தல் காணலாம். இப்பாடல்,

மீண்டா ரெனவுவந் தேன்கண்டு தும்மையிம் மேதகவே பூண்டா ரிருவர் முன் போயினரே, புலியூரென நின் ருண்டா னருவரை யாளியன் ளுனைக் கண்டேனயலே துரண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே. எனவரும் திருச்சிற்றம்பலக் கோவையை யடியொற்றி அன்பினைந்திணை யொழுகலாற்றுக்குரிய தலைவனது உள்ளத்து நிறையை நன்கு புலப்படுத்துவதாகும்.

இவ்வந்தாதியில் 38 முதல் 44 முடியவுள்ள பாடல் களில் மாதொரு பாகராகிய அர்த்த நாரீச்சுரர் திருக் கோலத்தியல்பு விரித்துரைக்கப் பெற்றுளது. இறைவன் கோயில் கொண்டருளிய திருத்தலங்களாக இவ் அந் தாதியில் அறுபத்தொன்பது தலங்கள் குறிக்கப் பெற் றுள்ளன. அவற்றுள் இமயம், கொல்லி, பொதியம், விந்தம், மந்தரம், மகேந்திரம், கருங்குன்றம், வெண்