பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 7.59

களில் வேட்டையாடித்திரியும் வேடுவர்களோடு வைத்து எண்ணப்படும் தாழ்வுடையராவரென்பது அடிகள் கருத் தாகும்.

நிலத்திமை யோரில் தலையாய்ப்பிறந்து மறையொடங்கம் வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த்தாலும் வெற்பன் குலத்துமை யோர்பங்கர் கச்சியுளே கம்பங் கூடித்தொழும் நலத் தமையாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே,

எனவரும் பாடலில் இக்கருத்துப் புலனுதல் காண்க.

சீலமின் றி அறிவின்றிக் கொலைகளவு முதலிய தீமை புரிந்தொழுகும் கீழ்ச் சாதி மக்களாயினும் ஏகம்ப வாணனுகிய இறைவனுடைய திருவடிக்கு அன்புடைய தொண்டராயின் அவர்களே யாவர்க்கும் மேலாகிய உத்தமராகப் போற்றத்தக்காரென்பதனை,

படையால் உயிர் கொன்று தின்று பசுக்களைப்போலச்செல்லும் நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும் கடையாய்ப் பிறக்கினுங் கக்சியுளே கம்பத் தெங்களையா ளுடையான் கழற்கன்பரேல் அவர் யாவர்க்கும் உத்தமரே.

என்ற பாடலில் அடிகள் குறிப்பிட்டுள்ளார். இறை வனடிக்குத் தொண்டு பூண்டொழுகுபவர் முன்னர் எத்தகைய குற்றமுடையராயினும் அவர்கள் இறைவனுக்கு ஆட்பட்டபின்னர் அக்குற்றங்களெல்லாம் எரி முன்னர்ப் பஞ்சுத்துய் போல வெந்து நீருக, எல்லா நற்பண்புகளும் பெற்று மேம்படுவாராதலின் ஆளுடையான் அடிக்கு அன்பரேல் அவர் யாவர்க்கும் உத்தமரே " என்ருர். இத் திருப்பாடல்,

அங்கமெலாங் குறைந் தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பராகில்

அவர்கண்டிர் நாம் வணங்குங் கடவுளாரே'

எனத் திருநாவுக்கரசடிகளார் அருளிய பொருளுரையைத் தன்னகத்துக் கொண்டு திகழ்கின்றது.

திருவேகம்பப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் தலைவன் தலைவி யென் பவர்களது அன்பின் திறத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்த அகத்துறைப் பாடல்கள் பல இத்திருவந்