பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 臂6器

ஒவாத் தொல்புகழ் ஒற்றியூச

மூவா மேனி முதல்வ நின்னருள்

பெற்றவர் அறியினல்லது

மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே, எனவரும் பாடலில் அடிகள் தெளிவாக விளக்கியுள்ளார். மாற்றம் மனங்கடந்து விளங்கும் இறைவன தியல் பினே உள்ளவாறுணர வல்லார்க்குப் பிறவிப்பிணி அறுதல் உறுதி யென்பதனை ஐந்தாம் பாடலில் அறிவுறுத்தியுள்ளார்.

சிவபெருமானது திருக்கோலத்தில் அமைந்துள்ள பொருள் நுட்பத்தை,

தூமதி சடைமிசைச் சூடுதல் துரநெறி ஆமதியானென அமைத்தவாறே அறனுரு வாகிய ஆனே றேறுதல் இறைவன் யானென இயற்றுமாறே அது அவள் அவனென நின்றமை யார்க்கும் பொதுநிலை யானென உணர்த்திய பொருளே முக்கனன் என்பது முத்தி வேள்வியில் தொக்க தென்னிடை யென்பதோர் சுருக்கே வேத மான்மறி யேந்துதல் மற்றதன் நாதன் நானென நவிற்று மாறே மூவிலை யொரு தாட் சூல மேந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே எண் வகை முர்த்தி யென் பதிவ் வுலகினில் உண்மை யானென உணர்த்திய வாறே. என ஆரும் பாடலில் அடிகள் தெளிவாக உணர்த்து கின்ருர்.

இறைவனகிய நின்னியல்பு சொல்லினெல்லைக்கு அப் பாற்பட்டு விளங்குவதாதலின் அதனை யறிந்துரைப்பார் ஒருவருமிலர் என ஏழாம் பாடலிலும், உடலாகிய கடலிற்பட்டுத் தடுமாறும் அடியேன நினது திருவடிப் புணையைத் தந்து உய்வித்தருள்க' என எட்டாம் பாடலிலும் குழந்தை அழும் அழுகை யொலியைக் கேளாத தூரத்தே தாய் சென் ருளாயினும் பிள்ளையின் பசிநேரத்தை யெண்ணி அவள் தானே விரைந்து வந்து பசி வருத்தத்தைத் தீர்த் தல் போன்று, பல பிறவிகளிலும் உழன்று மயங்கிச் செய்வ தறியாது திகைக்கும் எளியேற்கு இறைவனுகிய நீயே யெளி வந்து எனது பாசப் பிணிப்பினை நீக்கி யருள் புரிவா யாக என ஒன்பதாம் பாடலிலும் அடிகள் இறைவனை