பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764

பன்னிரு திருமுறை வரலாறு


திறல்கெட அரக்கனத் திருவி லுறுத்ததும் குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும் என்றிவை முதலா ஆள்வினை யெல்லாம் நின்றுழிச் செறிந்த நின்செய லாதலின் உலவாத் தொல் புக ழொற்றியூர பகர்வோர் நினக்கு வேறின் மை கண்டவர் நிகழ்ச்சியின் நிகழி னல்லது புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந்தோரே. என்ற பாடலில் அடிகள் தெளிவாக விளக்கிய திறம் அறிந்து மகிழத்தக்கதாகும்.

தற்போதத்தால் மெய்ப்பொருளையுணர முற்பட்டு

உயர்ந்த நான் முகன் முதலாக அறியாமையாகிய இருளொடு ஒற்றித்து நின்று யாக்கையுட்பட்டு வாழும் எல்லாயுயிர்களும், உருவம் உணர்வு. பெருமை, ஆற்றல் செல்வம், வன்மை, செய்யும் தொழில்வகை ஆகியவற்ருல் வேறு பட்டனவாகி வினைத்தொடர்பினின்றும் நீங்காது ஒன்றை யொன்ருெவ்வாதனவாய்க் கூடி நிற்பது இவ் வுலகத் தொகுதி. இதன்கண் வாழும் உயிர்களின் ஒழுக லாறுகள், நிலைபெற்ற பெருங்கடலுள் உயர்ந்து தோன்றும் அலைகளைப் போன்று இறைவனுகிய முழுமுதற் பொருளை யாதாரமாகக் கொண்டு தோன்றி, அப்பொருளினது வியா பகத்தினிடையே வளர்ந்து விரிந்தும் ஒடுங்கியும் இடம் பெயர்ந்தும் கலந்தும் ஒன்றிலும் தோய்வின்றி விளங்கும் அம்முதல்வனது இயல்பினை விளக்கி நிற்பன. இங்ங்னம் இறைவனது வியாபகத்துள்ளே இவ்வுலகத் தோன்றி நின் ருெடுங்கித் தொழிற்படும் இயல்பினை இறைவனது திருவருள் ஞானம் பெற்ற பெரியோர்கள் அறிவதல்லது திருவருள் பெருத ஏனையோர் அறிதலியலாது. இவ் வுண்மையினை,

பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா

இருள் துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்

உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்

திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்

வெவ்வேருகி வினையொடும் பிரியா

தொவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்

மன்னிய வேலையுள் வான் திரை போ ல

நின்னிடை யெழுந்து நின்னிடை யாகியும்

பெருகியுஞ் சுருங்கியும் பெயர்ந்துந் தோன்றியும்

விரவியும் வேருய் நின்றன விளக்கும்