பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82.É. பன்னிரு திருமுறை வரலாறு

தொண்டத் தொகை அடியார்களின் வரலாற்றுக் குறிப்புக் களைத் தமது நூலில் விரிவாக எடுத்துரைத்திருப்பார். ஒரு பசுவின் கன்றுக்காகத் தன் மகன்மேல் தேரூர்ந்த மனுச் சோழனுடைய மகன் பெயர் பிரியவரதன் என்பதும், அவனுடைய மந்திரி பாலையூருடையான் என்பதும், நம்பியா ரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தாயார் இசை ஞானியாரென்பவர் திருவாரூரிற் கெளதம கோத்திரத்து ஞான சிவாசாரியார்க்கு மகவாகத் தோன்றியவரென்பதும் இரண்டாங் குலோத்துங்க சோழன் காலத்தில் வரையப் பெற்ற திருவாரூர்க் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற் றுள்ளன. இக்குறிப்புக்களுள் எதனையும் சேக்கிழார் பெரிய புராணத்திற் குறிப்பிடவேயில்லை. ஆவின் கன்றுக்காகத் தன் மகன் மேல் தேரூர்ந்த அரசனைச் சூரிய வமிசத்து முதல்வகிைய மனுவென்று கவிச் சக்கரவர்த்தி சயங் கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் தம் நூல்களில் கூறியுள் ளார்கள். அங்கனமாகவும் இவ் வேந்தன் ஆதி மனுப் பெற்ற பெயரைத் தன் பெயராகக் கொண்ட மற்ருெரு சோழ மன்னன் எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில் விளக்கியுள்ளார். மேற்காட்டிய வண்ணம் இரண்டாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் அரசியலாதரவு கொண்டு வரையப்பட்ட திருவாரூர்க் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படும் திருத்தொண்டர் வரலாற்றுக் குறிப்புக்கள் பெரிய புராணத்தில் இடம் பெருமையின் இக் குறிப்புக்கள் இரண்டாங் குலோத்துங்க சோழன் காலத்தில் பெரிய புராணம் இயற்றப்பெற்ற தென்பதற்குச் சிறப்புடைய சான்ருதல் இல்லை.

மேற் குறித்த செய்திகளால் சென்னி அபயன் குலோத்துங்க சோழன், தில்லைத் திருவெல்ல பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு, என்றும் புவிகாக்கும் மன்னர் பெருமான் என ஆசிரியர் சேக்கிழாராற் பாராட்டிப் போற்றப்பெறும் சோழ மன்னன் இரண்டாம் இராசராச சோழன் மகளுகிய மூன்ருங் குலோத்துங்கனே என்பதும், இவ்வேந்தனே சேக்கிழார் பெருமான ஆதரித் துத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெருங்காப்பி யத்தை இயற்றுவித்த பெருந்தகை யென்பதும், திருத் தொண்டர் புராணமாகிய அருள் நூலினை இயற்றியருளிய திருவருட் செல்வராகிய சேக்கிழார் மூன்றங் குலோத்