பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/840

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம்

நூலமைப்பு

அருண் மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், தில்லைச்சிற்றம்பலவன், உலகெலாம் என்று அடி யெடுத்துக் கொடுக்கப் பெற்றுப் பாடியருளிய சிறப் புடையது, திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராண மாகும். இந்நூல், தமிழ்நாட்டில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சிகளாகிய வரலாறுகளைக் கருவாகக் கொண்டு இயற்றப் பெற்ற செந்தமிழ்க் காப்பியமாகும். நம் தமிழக வரலாறுகளை விரித்துக் கூறும் முறையில் பிறமொழிச் சார்பு எதுவுமின்றித் தமிழில் முதல் நூலாகத் தோன் றிய சிறப்புடைய செந்தமிழ்க் காப்பியங்கள் சில. அவற்றுள், சிலப்பதிகாரம் திருத்தொண்டர் புராணம் என்னும் இரண்டுமே மிகச் சிறந்தனவாகும். சோமுனிவர் இளங்கோவடிகள், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்த் திறங்களும் இனிது விளங்க அருளிய பெருங் காப்பியம் சிலப்பதிகாரமாகும். அதனுடன் ஒருங்கு வைத்து எண்ணத்தகும் பெருமை வாய்ந்தது, குன்றை முனிவராகிய சேக்கிழார் நாயனர் அருளிய இத்திருக் தொண்டர் புராணமாகும்.

இவ்விரு பெருங்காப்பியங்களையும் இயற்றியளித்த இப்பெருமக்கள் இருவரும், நாடாளும் மன்னர்களால் நன்கு மதிக்கப் பெற்றவர்கள் ; உலக மக்கள் அனைவரும் பசி பிணி ப ை என்னும் துன்பங்கள் இன்றி, என்றும் இன்பம் பெருகும் நல்லியல்பினுல் நிலை பெற்று வாழ்தல் வேண்டும் என்னும் திருவுள்ளத்துடன் துறவற நெறியினை மேற்கொண்ட அருளாளர்கள்; தமிழ் நாட்டில் தமிழ் வேந்தரும் மக்களும் ஒற்றுமையுணர்வுடன் அன்பினுற் கலந்து வாழ்தல் வேண்டும் என்னும் நன்ளுேக்குடன், தமக்குக் கிடைப்பதாக இருந்த சேரநாட்டின் அரச பதவியை வெறுத்து விலக்கி இளம் பருவத்திலேயே துறவற நெறியினை மேற்கொண்டவர் இளங்கோவடிகள். தமிழ் நாட்டில் தொன்று தொட்டு மேற்கொள்ளப் பெற்று