பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838 பன்னிரு திருமுறை வரலாறு

யிலே தான் நம் பெருமாளுகிய இறைவன், நம்மை ஆளு டைய தவச் செல்வியாகிய உமையம்மையார் கண்டு மகிழ, விருப்புடன் திருக்கூத்து ஆடியருள்கின்றன். இத்தகைய திருவருட் சிறப்பு தென்றிசைக்கல்லது வேறு எந்தத் திசைக்கு அமைந்துள்ளது? எல்லா உயிர்களுக்கும் உள் ளிருந்து விரியும் உள்ளக் கமலத்தைப் போன்று, மறை முதற் பொருளாகிய இறைவன் வெளிப்பட்டு எழுந்தருளி விருத்தற்குரியதாய் உலகமாகிய :ங்கையின் உன்னத் தாமரையாகத் தென் திசையில் திருவாரூர் திகழ்கின்றது. எமது பெருமாட்டியும் ஏழுலகங்களையும் பெற்றெடுத்த அன்னையும் ஆகிய காமாட்சியம்மையார், தம் பெருமாளுகிய இறைவனே நோக்கித் தவமியற்றிக் கம்பையாற்றின் கரை யிலே வெளிப்படக் கண்டு வழிபட்டுப் போற்றுதற்கு இட ஞகிய காஞ்சிப் பதியினைத் தன்பாற் கொண்ட சிறப் பினது அத் தென் திசையே. நமது குருதாதராகிக நந்தி தேவர் தவம் செய்து நிறைந்த திருவருளைப் பெற்ற பொலி வுடைய திருவையாறு என்ற திருப்பதியும் இத் தென் றிசைக்கண் உள்ளதே. இவ்வாறு தேசங்கள் எல்லா வற்றையும் விளக்கிய தென் திசையிலே, ஈசர்க்கு விருப் புடைய தோணிபுரம் முதலாகச் சிவபெருமானேப் பூசித்த தற்குப் பொருந்திய திருத்தலங்கள் பல உள்ளன. திசைக ளின் உயர்வினைக் குறித்துப் பேசப் புகின் அத்தென் திசைக்குப் பிற திசைகள் சிறிதும் ஒப்பாகமாட்டா" என்று பெருந்தவச் செல்வராகிய உபமன்னிய முனிவர் சிவமே நிலவிய தென்றமிழ் நாட்டின் சிறப்பினை வடகயிலையில் வாழும் முனிவர்களுக்கு விளங்க எடுத்துரைத்தருளினர்.

"அன்று, திருக்கயிலையில் உபமன்னியர் இம்மை வின விய முனிவர்கட்கு வன்ருெண்டர் வரலாற்றை விரித்துக் கூறிய முறைப்படி திருத்தொண்டத் தொகை விரியாகிய இந்நூலினை எனது விருப்பத்தினுற் கூறத் தொடங்கி னேன். இதற்குப் பதிகமாக அமைந்தது, திருவாரூரிற் புற்றிடங் கொண்ட பெருமானருளால் ஆரூரர் பாடிய திருத் தொண்டத் தொகையாகும். அப்பதிகத்திற் போற்றப் பெற்ற அடியார்களே நம்முடைய நாதராகிய நம்பியாண் டார் நம்பிகள் போற்றிப் பரவிய திருத்தொண்டர் திருவந் தாதி என்னும் வகை நூலினை ஆதரவாகக் கொண்டு திருத்தொண்டர் வரலாறுகளை இனி முறையே கூறத்