பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/853

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புசான்னம் 839

தொடங்குவோம். உலக உயிர்கள் பிறவிப் பிணிப்பி னின்றும் நீங்கி உய்தி பெறவும் திருநெறியாகிய சைவ சமயம் உலகில் நிக் பெற்று வளர்ந்தோங்கவும் எல்லேயில் புகழாளராகிய நம்பியாரூரர் பாடிப் போற்றிய சிவனடி யார்கள் திருக்கூட்டம் நிறைந்துறையும் பெருமையினைப் பெற்ற புனல் நாடாகிய சோழ நாட்டின் சிறப்பினை இனிக் கூறுவோம்" என ஆசிரியர் சேக்கிழாரடிகள் தாம் இயற்றத் தொடங்கிய வரலாற்றுக் காப்பியமாகிய திருத்தொண்டர் புராணத்தின் முன்னுரையாகத் திருக்கயிலாயத் திருமலே யின் சிறப்பினை முதற்கண் அமைத்துள்ளார்.

இவ்வாறு சேக்கிழாசடிகள் தாம் பாட எடுத்துக் கொண்ட காப்பியத்தின் தலைவராகிய நம்பியாரூரரது வரலாறு திருக்கயிலாயத் திருமலையிலே மாதவ முனிவர்க்கு முதன் முதலாக விரித்துரைக்கப் பெற்ற சிறப்புடைய தெனத் தோற்றுவாய் செய்து கொள்வதற்கு அகச் சான்ருக அமைந்தது,

இந்திரன் மால்பிரமன் எழிலார் மிகு தேவ ரெல்லாம் வந்தெதிர் கொள்ள வென்னை மத்த யானேயருள் புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர் என எம்பெருமான் நத்தமருசனென்ருன் நொடித்தான் மலையுத்தமனே’ (7-100.9)

என வரும் நம்பியாரூரர் வாய்மொழியாகும். வெள்ளையான மீது அமர்ந்து திருக்கயிலாயத்தையடையும் நம்பியாரூர ரைக் கண்ட மாதவ, முனிவர், இங்கு வரும் இவன் யார்? என வினவிய நிலையில் இவன் தந்தமர் ஊரூரன்’ எனச் சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளிஞர் என்பதனை இத் திருப்பாடலில் நம்பியாரூரர் தெளிவாகக் குறித்துள்ளமை அறியத் தகுவதாகும். இங்ங்னம் சிவபெருமானது அருளால் நம்பியாரூரரது வரலாற்றை முதன் முதல் அறியப் பெற்ற பெருந்தவ முனிவராவார் உபமன்னிய முனிவரே என்ப தனை மந்திர மாமுனிவர் என்னும் சிறப்புடைய மொழி களால் உய்த்துணர்ந்த சேக்கிழாரடிகள், அம் முனிவர் பெருந்தகையார் தம்மைச் சூழ்ந்து கொண்டு ஐயம் நீங்க வினவிய ஏனைய முனிவர்களுக்கு வன்ருெண்டரது வர லாற்றை விரித்துக் கூறிய முறையில் திருத்தொண்டத் தொகை விரியாகிய இக் காப்பியத்தை அமைத்துள்ளார். இந் நுட்பம்,