பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

பன்னிரு திருமுறை வரலாறு


மாமுனிவர் கூறுவர். திருப்பெருந்துறையிலிருந்து வாத ஆசடிகள் பாடியனவாகக் கருதப்பெறும் திருவாசகப் பாடல்

-- - 3 - או. * : ఫ్గ భ“్స ry' களில் இறைவனே குதிரைச் சாத்தொடு வந்தருளிய மதுரை

நிகழ்ச்சி குறிக்கப் பெறுதலாலும், பெருந்துறையிறைவன் குருவாக வந்து தம்மை ஆட்கொண்ட தோடன்றித் தம் பொருட்டுக் குதிரைகளைக்கொண்டு மதுரைக்கு எழுந்தருளி யும் வந்தி யென்னும் தவமுதியாளுக்குக் கொற்ருளாகப் போந்து மண் சுமந்தும் மன்னனடித்த பிரம்படி பட்டும் தம்மை உய்யக் கொண்டருளிய எளிமைத் திறத்தை யெண்ணி நெக்குருகிய வாதவூரடிகளுள் ளத்தில் இவ்வாறு தமக்கு அருள் சுரந்த குருமூர்த்தியை மீண்டும் கண்டு வழிபட வேண்டுமென்னும் பெருவேட்கை தோன்றுதல் இயல் பாதலாலும் அடிகள் மதுரையிலிருந்து மீண்டும் திருப் பெருந்துறைக்குச் சென்று திருப்பெருந்துறை வீசனே. இறைஞ்சிப் போற்றினர் எனக்கூறும் கடவுள் மா முனிவர் கூற்றே இவ்வரலாற்று நிகழ்ச்சிக்குப் பொருத்தமுடைய ாகத் தோன் ஆகின்றது. அடிகள் இன்னின் ைஇடங்களில் 請母 డ ఢ التي تنفقي 、翠 ڈئیر تو ته وييلي இன்னின்ன பதிகங்களைப் பாடினர் எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறும் குறிப்புக்கள் சிற்சில இடங்களில் அடிகள் வரலாற்ருெடு முரண்படுதலும் இவண் சிந்திக்கத்

தகுவதாகும்.

தி

. ருப்பெருந்துறையில் குருந்த மர நீழலில் அடியார்

يعيع

களாகிய மாணவர்கள் தற்சூழ ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிய சிவபெருமான், திருவாதவூசர்க்கு ஞானுேப தேசஞ் செய்த பின்னர் மாணிக்க வாசக இங்கு இருப்பா யாக எனக் கூறி உடன் வந்த அடியார்களுடன் மறைந் தருளிஞன் எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பியும் பரஞ் சோதி முனிவரும் கூறுவர். திருப்பெருந்துறையில் ஞானுேப

凉 称 * * ~~* : * o தேசம் பெற்ற வாதவூரடிகள் இறைவன் பணித்த வண்ணம் மதுரைக்குச் சென்று அங்கு இறைவன் செய்தருளிய திருவிளையாடல்களைக் கண்டு மீண்டும் திருப்பெருந் துறைக்கு வருமளவும் சிவபெருமான் ஆசிரியத் திருக்கோ லத்துடன் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார் எனக் கடவுள் மாமுனிவர் கூறுவர். இவ்விருவகைக் கருத் துக்களுள் முன்னவர் கருத்தே பொருத்தமுடையதாகத் தெரிகிறது. திருவாதவூரடிகள் மதுரைக்குச் சென்று மீளும் வரை இறைவன் தான் மேற்கொண்ட குருவடிவத்துடன்