பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/864

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 பன்னிரு திருமுறை வரலாறு

எனவரும் செய்யுட்களாகும். நெற்பயிர்கள் நீண்ட வயலிடத்தே ஓங்கி வளர்ந்து, தமக்கு ஒப்பில்லாமல் மிகுந்து, தூய வெள்ளிய உண்மைக் கருவின் வளத்தை யுடையனவாகிப் பின்னர்க் கருமுதிர்வதஞல் பசலைநிறம் அடைந்து இலையாகிய சுருளே விரித்துச் சிவபெருமானுக்கு அன்பராயிஞரது விரிந்த மனத்தினை யொத்துக் கதிர்க ளெல்லாம் விரியப்பெற்றன. இறைவன்பாற் செலுத்தும் பேரன்பாகிய பத்திதெறியின் வழிப்பட்டவராய் இறை வனுக்கு ஆட்பட்ட அன்புடைய அடியார்கள் தாங்கள் ஒருங்கு எதிர்ப்பட்டபொழுது ஒருவர்க்கொருவர் தாளில் தலபொருந்த வீழ்ந்து வணங்குவது போன்று, செறிந்து நீண்ட வரிசைகளிலே இனிய பால் ஊறி முதிர்ந்த கதிர்களாகிய தலைகளைத் தாழ்த்தி, அந்தச் சிவஞானிகளின் பால் சிவபோகமாகிய பேரின்பம் விளைவது போன்று நெற்கதிர்களெல்லாம் முதிர்ந்து போகம் விளைந்தன என்பது இச்செய்யுட்களின் பொருளாகும்.

சோழநாட்டு உழவர்கள், நெல்லையும் மீனையும் முத்தினையும் மலரினையும் மலைகள் போற்குவித்த திறத்தினையும், நெற்போர்மலையை முகடு சாய்த்துக் கரிய எருமைகளைக் கொண்டு மிதித்துச் சூழச்செய்தலையும், வைக்கோலைப் பிரித்தெடுத்து வேறிடத்திற்போக்கி நெல்லைத்துற்றிப் பொன்மலையும் நவமணிக்குன்றுகளும் போன்று குவித்துள்ளமையால் அந்நாடு நிறைந்த மலை களைத் தன்பாற் கொண்ட குறிஞ்சிநிலம் போன்று திகழும் காட்சியையும் ஆசிரியர் இப்படலத்தில் 28 முதல் 25 முடியவுள்ள செய்யுட்களில் புனைந்துரைத்துள்ளமை படித்து இன்புறத்தகுவதாகும்.

சோழநாட்டுக் குடிமக்களின் அரசியல் மாண்பினை யும் அறத்தின் வழி யொழுகும் அவர்தம் வாழ்க்கை முறை யினையும செல்வ வளததையும்,

அரசுகொள் கடன் க ளாற்றி மிகுதிகொண் டறங்கள் பேணிப் பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையுந்தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்’

என வரும் செய்யுளில் அழகுறப் புலப்படுத்தியுளைார். தமது நன்முயற்சியால் விளைந்த நெல்லில் அரசர்க்குச்