பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/866

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85% பன்னிரு திருமுறை வரலாறு

என்ற செய்யுளாகும். உழவர்கள் கருப்பஞ்சாற்றினைக் காய்ச்சுதலால் கரும்பாலைகளிலிருந்து எழும் நறிய புகையோ அன்றி மாதர்கள் தம் கூந்தலிலணிந்த மலர் களில் மொய்த்துள்ள வண்டுகள் மேலெழும்படி அகிலக் கொண்டு புகைத்துள்ள நறுமணப் புகையோ தூணங்களை யுடைய வேள்விச்சாலைதோறும் பெரும்பொருளாகிய இறைவனை நோக்கிச் செய்யும் வேள்வியிற் பிறங்கிய புகையோ அன்றி வானத்தே எழுந்த கரிய மேகத்தின் கூட்டமோ மாடங்களிலும் சோலைகளிலும் மிக்குச் சூழ்ந்துள்ளவை இவையெனப் பிரித்துணர வொண்ணுத வாறு அமைத்துள்ளன என்பது இச்செய்யுளின் பொரு ளாகும்.

ஆலைக் கமழ் நறும் புகை உழவர்களது பொருள் முயற்சியினையும், மாதர் அகிலால் இட்ட தூபம் இன்ப நுகர்ச்சியையும், வேள்விப் பெரும் பெயர்ச்சாலை தோறும் பிறங்கிய புகை மெய்ப்பொருளை யுணர்ந்து இயற்றும் அறச் செயலினையும், வானின் வரும் கருமுகில் இவ்வுறுதிப் பொருட்குக் காரணமாய் இறைவனது அருளெனப் பொருந்திய வான்சிறப்பினையும் இனிது புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை உணர்ந்து மகிழத்தகு வதாகும். இவ்வாறே மதுரை நகர மாந்தரின் அறம் பொருளின் பத்தொடு பொருந்திய இனிய வாழ்க்கை வளத்தினை,

" அட்டிற் புகையும் அகல் அங்காடி

முட்டாக் கூவியர் மோதகப் புகையும்

மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த

அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்" (சிலப்-புறஞ்சேரி

122 – 125)

எனப் பல்வேறு பூம்புகையால் இளங்கோவடிகள் புலப் படுத்தியுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணர்தற்பாலதாகும்.

சோழ நாட்டிலுள்ள இளமரச் சோலைகளில் நாளி கேரம் செருந்தி, சூத பாடலம் முதலிய மரங்கள் எழில் பெறச் செறிந்துள்ளன. எங்குபார்த்தாலும் மங்கல வினைகளும் மணஞ்செய் கம்பலைகளும் நிரம்பியுள்ளன. அந்நாடடு மங்கையர்கள் மலர்ந்த முகமும் இன் சொல்லும் சிறந்த அணிநலங்களுமுடையவராய்ச் செல்வ வாழ்வு