பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/867

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 853

வாழ்கின்றனர். நாடெங்கும் வேத முழக்கமும் வேள்விச் சடங்குகளும் யோகமும் தவமும் போகமும் பொலிவு பெற்று விளங்குகின்றன. யாழும் குழலும் ஆகியவற்றின் இன் னிசையும் வேதியர் வேத ஓசையும் எங்கும் மிக்குத் தோன்றுகின்றன. மனைகள் தோறும் மகளிர் அம்மனைபயின்று துணைவருடன் மாலையணிந்து மகிழ் கின்றனர். வீதிகள் தோறும் திருவிழா ஆரவாரமும் வீடுகள்தோறும் விருந்தோம்பும் ஆரவாரமும் மிக்குள்ளன. மக்கட் குலத்தார் அனைவரும் தத்தமக்குரிய ஒழுக்க நெறியில் தவருது ஒழுகுகின்றனர். பிள்ளைகள் தாய் சொல்லின் வழி அடங்கி ஒழுகுகின்றனர். பறவைகளும் விலங்குகளும் வேறு நிலத்தை நாடாதனவாய்ப் பகை நீங்கித் தத்தம் வரம்பில் அமைந்து வாழ்கின்றன. நாட்டில் வாழும் நன்மக்கள் இடைவிடாது திருவைந் தெழுத் தோதி இறைவனை வழிபடுமியல்புடையராயிருத் தலால் கொடிய நோய்கள் அந்நாட்டிற்புக அஞ்சி விலக அந்நாட்டவர் அனைவரும் பிணியற்ற நல்வாழ்வுடைய சாய்த் திகழ்கின்றனர் என்னும் இச்சிறப்புக்களை இப் படலத்தில் 28 முதல் 34 வரையுள்ள செய்யுட்களில் ஆசிரியர் இனிது விளக்கியுள்ளார்.

இவ்வாறு, சோழநாடு பசியும் பிணியும் பகையும் இன்றிப் பல்வகை வளங்களைப் பெற்று விளங்குதற்குக் காரணமாயமைந்தது, அந்நாட்டினை ஆளும் சோழ மன்னரது அறத்தொடு பொருந்திய ஆட்சி முறையே என அறிவுறுத்துவார்,

" நற்றமிழ் வரைப்பின் இங்கு நாம் புகழ் திருநாடென்றும்

பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிது காக்கும் கொற்றவன் அநபாயன் பொற் குடைநிழற் குளிர்வ

தென் ருல் மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ ' எனத் தம்மை ஆதரித்த அநபாயன் என்னும் சோழ மன்னனது குடைநிழல் மாண்பினை இனிது புலப்படுத்தி இத்திருநாட்டுச் சிறப்பினை ஆசிரியர் நிறைவு செய்கின்ருர், செங்கோற் சோழ மன்னனது வெண் கொற்றக் குடைநிழல் திங்களைப் போன்று குளிர்ச்சி தருவதாய்ப் பல்லுயிர்க்கும் தண்ணளி செய்து பாதுகாக்குந் தன்மையது என்பதனை,