பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868 பன்னிரு திருமுறை வரலாறு

" காதின் மறைநாவோசையல்ல தியாவதும்

மணிநாவோசை கேட்டது மிலனே' (கட்டுரை - 30-32) என மதுரைமா தெய்வம் கண்ணகியை நோக்கிக் கூறு வதாக அமைந்த இத்தொடர், பண்டைத் தமிழ் வேந்தரது அரண்மனை வாயிலில் மணி கட்டப்பெறும் வழக்கத்தினை நன்கு புலப்படுத்துவதாகும். இவ்வாறே தேவர் முதலியோர் தம் குறையினைத் தெரிவித்துக் கொள்ளுதற்கு வாய்ப்பாகச் சிவபெருமான் திருக்கோயில் வாயிலிலும் மணி கட்டப்பெற்றிருந்த தென்பதனை,

மூவா வுருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை காவாயெனக் கடை தூங்கு மணியைக் கையாலமசர்

நாவா யசைத்த வொலியொலி மாறிய தில்லையப்பாற் lவா யெரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே ' (A-113-3)

எனத் திருநாவுக்கரசர் வெளியிட்டருளிய திறம் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

வாயிற்கடை மணியின் ஒலி மன்னன் செவியிற்பட்ட தன்மையினை,

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ

வேந்தன் வழித்திரு மைந்தன் ஆவி கொளவரு மறலியூர்திக் கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் கடைமுன்

கேளாத் தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்கபோது '

(திரு நகரச் - 28) எனவரும் செய்யுளில் மன்னன் மன நிலைக்கு ஏற்ப ஆசிரியர் கூறும் திறம் உற்றுணரத் தகுவதாகும். என் இதற்கு உற்றது?’ என மன்னன் அமைச்சரை இகழ்ந்து நோக்கிய நிலையில், முதிர்ந்த கேள்வித் தொன்னெறி அமைச்சன் ஆராய்ந்து கூறும் மறுமொழியாக அமைந்தது, வளவநின் புதல்வன்.ஆங்கோர் மணிநெடுந் தேர்மேல் ஏறி அளவில்தேர்த் தானே சூழ அரசுலாந் தெருவிற் போங்கால் இளைய ஆன் கன்று தேர்க்கா லிடைப்புகுந் திறந்த தாகத் தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மையென்ருன் ' (திருநகரச் - 31) என்ற செய்யுள். அரசுலாந் தெருவில் அரச குமரர்களும் அளவில்லாத தேர்ப்படைகளும் புடைசூழ, மணிகள் கட்டப் பெற்ற தேர்மேல் உலாப்போந்த அரசகுமாரன்மேற்