பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

922 பன்னிரு திருமுறை வரலாறு

தாயத்தார்; பிறந்தது முதல் சிவபெருமான்யால் கொண்ட பேரன்பின் திறத்தால் மறந்தும் அயல் நினைவின்றிப் பிறப்பின் வழிவந்த செயலாகிய அறத்தினைச் செய்பவ ராகவே சிவனடித் தொண்டிலும் சிறந்து விளங்கினர். அவ்வூரிலே மானியமாகத் தமக்கு விடப்பட்ட பறைத் துடவையாகிய நிலத்தின் விளைவினையே தமக்குரிய உணவுரிமையாகக் கொண்டு தமது தொழில் முயற்சியாற் சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய தோற்கருவி களுக்குரிய தோலும் வாரும் வீணைக்கும் யாழுக்கும் நரம்பும், அர்ச்சனைக்குக் கோரோசனையும் கொடுத்தலத் தமது கடமையாகக்கொண்டு திருக்கோயிலின் புறவாயிலில் நின்று அன்பின் மேலீட்டினல் சிவனைப் போற்றி ஆடுதலையும் இசையுடன் பாடுதலையும் உடையவரா யிருந்தார்.

அவர், ஒருநாள் திருப்புன்கூர் சென்று சிவலோக நாதர் திருக்கோயில் வாயிலிலே நின்று கொண்டு சீரேறும் இசைபாடிப் பெருமான நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார். அந்நிலையிற் சிவபெருமான் அவரது விருப்பத் திற்கு இசைந்தருளித் தம் திருமுன்புள்ள நந்திதேவரைச் சிறிது விலகச் செய்து சிவலிங்கத் திருமேனியினைப் புலப் படுத்தி அருள் செய்தார். சிவலோகமுடைய பெருமானை நேரே கண்டு கும்பிட்டு மகிழ்ந்த நந்தனர், அப்பகுதியில் திருக்கோயிலுக்கு அண்மையில் ஒரு குளத்தினைத் தோண்டிப் பணிசெய்து அத்திருக்கோயிலே வலம் வந்து தம்மூர்க்குச் சென் ருர். இவ்வாறு இறைவன் எழுந் தருளும் திருத்தலங்கள் பலவற்றுக்குஞ் சென்று வணங்கிய நந்தனரது உள்ளத்திலே ஒருநாள் திருத்தில்லைத் திருமன்றினைச் சென்று இறைஞ்ச வேண்டும் என்னும் பெருங்காதலுணர்வு இடைவிடாது எழுந்தது. அன்று இரவு முழுவதும் கண்ணுறங்காத நந்தனுர் பொழுது விடிந்த பொழுது, தில்லைத்திருமன்றினை அடைதற்கு யான் பிறந்த குலத்துடன் பொருத்தமில்லையே என்று எண்ணினர். சென்று வழிபட வேண்டும் என்னும் இந்நினைவும் எம்பெருமாளுகிய இறைவனது கட்டளையே என்னும் பெருங்காதல் மேலிடுதலால் தானேப் போவேன் ' என்று அடிக்கடி கூறி, நாள்கள் பல