பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/967

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 951

எதிர்கொண்டு வணங்கி இன்னுரை பகர்ந்து திருவமுது செய்வித்து அவர்கள் விரும்புவனவற்றைக் குறைவறக் கொடுத்து மகிழ்பவர். இவர் திருவைந்தெழுத்தோதிச் சிவபெருமானைக் குறித்துச் செய்தற்குரிய வேள்விகள் புரிந்து இடையருப் பேரன்பால் நல்லறங்கள் பல செய்து சிவபெருமான் திருவடி நீழலை யடைந்தார்.

சிறுத்தொண்ட நாயனர்

காவிரித் திருநாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன் றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும் வடநூற்கலையிலும் படைக் கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர் , யானை யேற்றம் குதிரை யேற்றம் ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறை கலைத் துறைகள் ஒழிவின் றிப் பயின்ற வற்ருல் சிவன் கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந் நெறியாவதெனத் தெளிந்தவர் ; ஈசனடியார்க்குப் பணி செய்தலை இயல்பாகக்கொண்டு மன்னனுக்குச் சேனதிபதி யாய்ப் போர்முனையிற் பகையரசர்களைப் பொருது வென்று அரசனுல் நன்கு மதிக்கப் பெற்ருர். இவர், மன்னன் பொருட்டு வடபுலத்திற் படையெடுத்துச் சென்று வாதாவி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும் செல்வங்களையும் யானை குதிரை முதலியவற்றையும் கைப்பற்றித் தம் வேந்தன் பாற் கொணர்ந்தார். அரசன் இவரது களிற்றுரிமை ஆண்மையினை அதிசயித்துப் புகழ்ந்து பாராட்டினன். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள் , அரசே! இவர்பால் சிவபெரு மானது திருத்தொண்டின் வன்மை நன்கு வாய்த்திருத் தலால் இவரைப் போரில் எதிர்க்க வல்லார் இவ்வுலகில் யாருமில்லை என்ருர்கள். பரஞ்சோதியாரைத் தம்பெருமான் திருத்தொண்டர் எனக் கேள்வியுற்ற மன்னன், ! உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன் என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம் பெருமானே : எனது பிழையைப் பொறுத்தல்வேண்டும் என்று இறைஞ்சினன்,

மன்னன் இறைஞ்சுதலும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி அரசே! எனது உரிமைத் தொழிற்கடுத்த