பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/999

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் §§§

மாடக்கோயில், தண்டல நீனெறி, நன்னிலத்துப் பெருங் கோயில் முதலிய மாடக்கோயில்களைத் தமிழகத்தில் முதன் முதல் கட்டிய பெருமை கோச்செங்கட் சோழர்க்கே உரியதாகும். கோச்செங்கட் சோழநாயனர் தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானை வழிபடுதற்கென எழுபது மாடக் கோயில்களை அமைத்தார் என்பதும், சிவனடியாராகிய அவர் திருமாலுக்கும் திருநறையூரில் மணிமாடம் என்ற திருக்கோயிலைக் கட்டினர் என்பதும்,

  • இருக்கிலங்கு திருமொழிவாய் எண் தோள் ஈசற்கு

எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே "

(பெரிய திருமொழி 6-8-8)

எனவரும் திருமங்கையாழ்வார் அருளிச் செயலால் அறியப்

படும்.

சங்க காலச் சோழ மன்னருள் ஒருவராகிய கோச்செங் கட் சோழர் சேரமான் கனைக்காலிரும்பொறையை வென்று சிறைப்படுத்தியபொழுது பொய்கையார் என்னும் புலவர் களவழி நாற்பது என்னும் பனுவலைப் பாடிச் சேரனைச் சிறையினின்றும் விடுவித்தார் என்பது, புறநானூறு 74-ஆம் பாடலுக்கமைந்த உரைக்குறிப்பிலுைம்,

" களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்

கால்வழித் தளையை வெட்டிய சிட்டவவனும் "

எனவரும் கலிங்கத்துப் பரணியாலும் உணரப்படும்.

சோழர் குலத்தோன்றலாகிய கோச்செங்கட் சோழர் தமக்குரிய சோழ நாட்டுடன் பாண்டியர்க்குரிய தென்னுட் டையும் கைக்கொண்டு வேப்பமலர் மாலை சூடி ஆட்சி புரிந்தார் என்பது,

தென்னவகு யுலகாண்ட செங்களு ற் கடியேன். '

எனவரும் திருத்தொண்டத் தொகைத் தொடராலும் அதற்கு வகையாகத் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள், நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்களுன் எனக் குறிப்பிட்டுரைக்கும் அடைமொழியாலும் உய்த்துணரப் படும்.