பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யன்தரும் யோகாசனங்கள் 1 O1 ஆசனம், முடிந்ததும், எழுந்து, விறைப்பாக ஓரிரு நிமிடங்கள் நிற்க வேண்டும். இது, பழையபடி இரத்த ஓட்டத்தை சரிசெய்து இயல்பாக ஓட உதவி செய்கிறது. எச்சரிக்கை: சிரசாசனத்தை மிகவும் பயபக்தியுடன் செய்யவும். நல்ல உடல் நிலையில் இருப்பவர்களுக்கே இந்த ஆசனம் தேவை. பலஹlனமானவர்கள் இதனை செய்யக் கூடாது. ஒரே நாளில் இதனை இரண்டு முறை செய்யக் கூடாது. காலைக்கடன் முடித்து கழிவுப் பொருளை அகற்றிய பிறகே, இந்த ஆசனத்தைத் தொடங்க வேண்டும். சாப்பிட்ட பிறகோ அல்லது இரவு நேரங்களிலோ இதனை செய்யக் கூடாது. சிரசாசனம் செய்தவுடனேயே முகத்தைக் கழுவுவதோ, குளிப்பதோ, குளிர்ந்த காற்று வீசும் திறந்த வெளியில் நடப்பதோ கூடாது. தலை சூடாக இருப்பவர்கள், கண்கள் சிவப்பாக இருப்பவர்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், இதயத் துடிப்பு அதிகம் உள்ளவர்கள், சித்த பிரமை உள்ளவர்கள் இதனை செய்யக்கூடாது. பயன்கள்: இரத்தத்தைத் தூய்மைப்படுத்துகிறது. ஈரல், மண்ணிரல், நுரையீரல், பிறப்புறுப்புக்கள் போன்றவற்றில் வரும் நோய்களைத் தீர்க்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆஸ்த்மா போன்ற சுவாசக் கோளாறுள்ள நோய்களைக் (1,600 '11 டுத்திக்கொள்ள உதவுகிறது. தலைப் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டத்தை அளித்து பிட்யூட்டரி சுரப்பியை சிறந்த பணியாற்றத் தூண்டுகிறது.