பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா என்பதை முழு மூச்சாகக் கொண்டும். பணியாற்ற விடுவது கர்மயோகம். இறைவழியே திருவழி, பெருவழி என்கிற மெஞ்ஞான அறிவினை மிகுதிப்படுத்த முயல்வது ஞானயோகம். பரம் பொருளினிடம் தம் வாழ்வினையே சமர்ப்பித்து, தன்னை சரணாகதியாக்குகின்ற பக்தியிலே தன்னை ஈடுபடுத்துகின்ற தன்மையை வளர்ப்பது பக்தியோகம். ஒலிப்பாடுகளின் அதிர்வலைகள் பற்றிய அறிவியலில் ஈடுபட்டு, மந்திரங்களின் மூலம் மேன்மைநிலை அடைய உதவுவது மந்திரயோகம். மந்திரம் என்பது மன்+திரம் என்று பிரிகிறது. மன் என்றால் சமஸ்கிருதத்தில் நினைப்பது. திரம் என்றால், திரும்பத் திரும்ப நினைப்பது. நல்லதை திரும்பத் திரும்ப நினைத்து, உச்சரிப்பதையே மந்திரம் என்று நமது முன்னோர்கள் கூறினர். எனவே, பலநிலைகளில் பல வழிகளில், மனித உடலை அமைதிப்படுத்தி, மனநிலையை ஒருமைப்படுத்தி மாபெரும் சக்தியுடன் விளங்குகின்ற பெருமை நிலையை அளிக்கின்ற யோகமுறைகளின் வகைகளை மேலே கண்டோம். உடல் நலயோகம் இனி, எல்லோருக்கும், எல்லா பருவத்தினருக்கும் ஏற்ற அளவில் பயன் தரும் ஹடயோகப் பயிற்சி முறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். ஹ என்றால் சூரியன் அல்லது நேர்முக சக்தி என்றும் (Positive), ட என்றால் சந்திரன் அல்லது மறைமுகச் சக்தி (Negative) என்றும் கூறி, இவ்விரண்டு சக்திகளையும் உடலில் இணைத்து நிறுத்தி, நிலைப்பெறத் தக்க வகையில்,