பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ நான்காம் நிலை: 1. 6 எண்ணிக்கை வரை மூச்சை' உள்ளே இழுத்தல். / 2.6 எண்ணிக்கை வரை மூச்சை உள்ளே வைத்திருத்தல் 3. 6 எண்ணிக்கை வரை மூச்சை மெதுவாக வெளியே விடுதல். 4. 6 எண்ணிக்கை வரை மூச்சு இழுக்காத நிலையில் இருத்தல். 6x6x6x6 என்றும், 8x8X8x8 என்றும் இழுக்கலாம். இவ்வாறு பிராணாயாமம் மூலம் மூச்சினை இழுக்கிறோம், நிறுத்துகிறோம். மெதுவாக வெளியே விடுகிறோம். இழுக்காமலேயே இருக்கிறோம். இவ்வாறு கொஞ்சங் கொஞ்சமாக எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டு போகும் பழக்கத்தை மேற்கொண்டு, செயல்படுத்தும் பொழுதுதான், அரிய சக்தியினைப் பெற முடிகிறது. இவ்வாறு செய்வதால் நாம் அடையும் லாபம் என்ன என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இப்படி நிறைய மூச்சுக் காற்றை இழுப்பதால், உபயோகப்படாத நுரையீரலின் மூலை, முடுக்குப் பகுதிகளில் எல்லாம், அதிக அளவு காற்றினை அனுப்ப முடிகிறது. அதனால் கிடைக்கும் நன்மையோ பலப்பல. ஆழ்ந்து மூச்சிழுத்தலால் நிறைய உயிர்க் காற்றைப் பெற நேர்கிறது. அதனால், இரத்தம் சிறப்புற தூய்மையடைய வும், பழுதுபட்ட செல்கள் மற்றும் பாகங்கள் விரைவில் புதுப்பிக்கப்படவும், மற்றும் வளர்ச்சியுறவும், போன்ற வேலைகள், உடலுக்குள்ளே விமரிசையாக நடைபெற ஏதுவாகின்றன.