பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ அவர்களை பலவந்தப்படுத்தி, அதட்டி உடனே செய்துவிடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. முதலில் பழக்கத்திற்குத் தூண்டவேண்டும். அத்துடன் அவர்களால் டிம் என்று நம்பிக்கையை மனதிலே ஊட்ட வேண்டும். ஆசனப் பயிற்சியை மாணவர்கள் விரும்பிச் செய்யும் வண்ணம் மணப் பக்குவத்தை ஒருவித ஈடுபாட்டை உற்சாகத்தை அவர்களுக்குக் கூட்ட வேண்டும். ஆசனத்தைக் கடனே என்று செய்யாமல், சுகம் தரும் பயிற்சி என்ற நினைவுடனேதான் எல்லோரும் செய்ய வேண்டும். (எ) உணவு முறை சத்துள்ள உணவு, நலமான உடலை நல்கும், சத்துள்ள உணவு என்றதும், மிகவும் விலையுயர்ந்த, அதிகம் செலவழித்துப் பெறும் உணவல்ல. அதிக செலவில்லா மலேயே, நலம் தரத்தக்க உணவு வகைகளையும் நம்மால் பெற முடியும். - * - - - அதிகம் காரமும், புளிப்பும், உப்பும் உணர்வுகளைத் தூண்டும் தன்மையனவாகும். மிளகாய், புளி, போன்ற பொருட்கள்தான் சமையலில் அதிக இடம் பெறுகின்றன என்றாலும், அவைகளின் அளவை நாம் குறைக்க முடியும். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழமும், தக்காளிப் பழங்களும் அதிகமாகப் பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது. அதிகமான இனிப்புப் பண்டங்கள் நோய்க் கிருமிகளைத் தாங்கி வளர்க்கின்ற தன்மையுடையவை முடிந்தவரை அவைகளைத் தவிர்க்கவும். தேன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் இனிப்பாகும்.