பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 47 (ஊ) ஆசனங்களை, மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு ஒரு சில குறிப்புக்கள்: ஒவ்வொரு ஆசனத்திற்கும், தேவை எவ்வளவு இடம் என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மாணவர்களை இருக்கச் செய்யவேண்டும். இடைவெளி அதிகம் இருந்தால்தான், இடிபடாமல் இடைஞ்சல் இல்லாமல், இடித்துக்கொள்ளளாமல், மாணவர்கள் செளகரியமாக ஆசனம் செய்ய முடியும். ஆசிரியர் முன்னால் இருப்பதுபோல் இருந்து, மாணவர்களை அரைவட்டம் போன்ற அமைப்பில் உட்கார வைத்திருந்தால், எல்லாரையும் கண்காணிக்கவும், அதே சமயத்தில் ஆசனங்களை செய்து காட்டும்போது மாணவர்கள் நன்கு பார்த்துப் புரிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும். தான் செய்யப்போகின்ற ஆசனத்தின் பெயரை ஆசிரியர் முதலில் கூறவேண்டும். அதற்குரிய வடிவ அமைப்பையும் விளக்கிட வேண்டும். ஆசனத்தைத் தொடங்கும் முறை, அதற்குரிய நிலைகள் எத்தனை என்பதையும் கூற, ஒன்றன்பின் ஒன்றாக செய்து காட்ட வேண்டும். அவ்வாறு இருக்கும் நிலைகளை, எண்ணக் கைக்கேற்ப செய்யுமாறு மாணவர்களைத் தூண்ட வேண் எல்லா மாணவர்களும், உடனே ஆசில த ை செய்து விடமுடியாது. சொன்ன உடனே செய்து முடிக்கும் மாணவர்களும் உண்டு. முதல் நிலையிலேயே திணறிக் கொண்டிருக்கும் மந்தமானவர்களும் உண்டு.