பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 93 2. முழங்கால்களை பக்கவாட்டில் விரித்து விறைப்பாக நிமிர்ந்து இருக்கவும். o 3. இயல்பாக முன்னிருந்த நிலைக்கு வரவும். பயன்கள்: உட்காடாசனத்தின் மூன்றாம் பிரிவுக்கு உண்டான பயன்கள் அனைத்தும் இதில் கிடைப்பதுடன், பாதங்களில் இருக்கின்ற வளைவுப் பகுதி (Arch) இல்லாத வர்களுக்கு ஒரு நல்ல அமைப்பினை உருவாக்கித் தரும் பொறுப்பேற்கிறது இந்த ஆசனம். தொடர்ந்து செய்தால், வலுவான கணுக்கால்களைப் பெறலாம். 26. உத்தியாசனம் விளக்கம்: வயிற்றுத் தசைகளுக்கான முக்கிய பயிற்சி இது. இது இரண்டு வகைப்படும். 1. உத்தியாசனம், 2. நெளலி. உத்தியாசனம் என்பது, அடிவயிற்றை உள்ளே அமுக்கி அடக்கிக் கொண்டு போய், ஒரு குழியை உண்டாக்கியப் பிறகு, உதரவிதானத்தை (Diaphram) மேலே உயர்த்திய வண்ணம் நிற்பது. நெளலி என்பது, வயிற்றை உள்ளடக்கிய, பிறகு அதிலுள்ள நேரான தசைகளை நேர்வயப்படுத்தி அமைத்துக் காட்டுவது. இங்கே உத்தியாசன செயல் முறையை மட்டும் காண்போம். --- ----------