பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i தமிழின் பழமை

உயிர்த்தொகுதியில் மனிதன் சிறந்தவகை இருக்கிருன். அவனுக்குப் பகுத்தறிவு இருப்பதனல் கண்ணுல் கண்டும் காதால் கேட்டும் பிறபொறிகளால் உணர்ந்தும் தெரிந்து கொண்டவற்றை வேறுப்பிறமொழி களால் அறிந்து பிரித்து அறிந்தும், மறவாமல் நினைந்தும், தொடர்பு படுத்திச் சிந்தித்தும் வாழ் கிருன். இந்த ஆற்றல்மாட்டுக்கு இல்லே, எறும்புக்கு இல்லே.

மற்றெரு முக்கியமான வேற்றுமையைப் பிராணிகளிடத்திலே பார்க்கிருேம், வாயில்லா ஜீவன் களாகிய விலங்கினங்களுக்குப் பேசத் தெரியாது. மனி தன் பேச்சென்னும் அற்புதமான வரத்தைப் பெற்றி ருக்கிருன். விலங்குகளுக்கும் பாஷை உண்டு. ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வொரு ப்ாஷை இருக்கிறது’ என்று சொல்பவர்கள் இருக்கிருர்கள். அதில் உண்மையும் உண்டு. ஆல்ை அந்தப் பாஷை பச்சைக் குழந்தையின் பாஷையைப் போன்றது. சில வகை ஒலிகளுக்குள்ளே உணர்ச்சிசுளே வெளியிடும் பாஷை அது. அழுகை: சிரிப்பு, ஹாம் என்று சொல்வது - இவ்வாறு உள்ள ஐந்தாறு ஒலிகளே குழந்தையின் வாக்கிலிருந்து உண் டாகும் பாஷை; அது போலவே விலங்கினங்களின் பாஷை இருக்கிறது என்று செச்ல்லலாம். -

மனிதனுடைய பாஷையோ அவனது உள்ளக் கருத்தை இயன்ற வரையில் தெளிவாகச் சொல்லும்