பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝 பயப்படாதீர்கள்

கருவியாக இருக்கிறது. பல மனிதர்கள் தமக்குள்ளே அமைத்துக் கொண்ட வரையறைக்குள் அடங்கி ஒரு பொதுமைப் பண்பைப் பெற்றுருக்கிறது. தேசத்தின் வட கோடியில் உள்ள குழந்தை கல்லேக் கல்லென் கிறது; தென் கோடியில் உள்ள கிழவனும் அதைக்

கல்லென்றே சொல்கிருன். இது இயற்கையாகவே அமைந்த நியதியைப் போலத் தோன்றும் கட்டுப் பாடு: இதல்ைதான் பாஷையின் உபயோகம்

அதிகமாகிறது. இந்தப் பொதுக் கட்டுப்பாடு இல்லா விட்டால், வீட்டுக்கு ஒரு பாஷையாக, குடும்பத்துக்கு ஒரு பாஷையாகப் பாஷைகள் முளேத்திருக்கும்; பல ருக்குப் பயன்படாமையால் அவை சில காலம் இருந்து மறைந்துபோயிருக்கும். - இன்ன பொருண் இன்ன ஒலியில்ை குறிப்பது என்ற வரையறையை உணர்ந்து, அப்படியே ஒருவ ரைப் போலவே பிறரும் வழங்கி வந்ததல்ைதான் பாஷையானது பல் இடங்களுக்குப் பரவிப் பல கால மாக நிலவி வருகிறது. ஒர் இனமக்கள். தம்முடைய முயற்சியில்ை உலகத்தில் பல இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கில்ை அவ்வினத்தோருக் குரிய மொழி அதிகமாகப் பரவுகிதது. இன்று ஆங் கிலமொழி உலகத்தில் பல இடங்களிலே பரவியிருப்ப தற்குக் காரணம், அந்த மொழியினிடம் மக்களுக் குள்ள விருப்பம் அன்று; அதனைப் பேசும் இனத் தார் தம் முயற்சியைப் பல நாடுகளிலும் பரப்பி ஊன் றிக் கொண்டதுதான் காரணம். .

பாஷை முதலில் மனிதனுடைய, அன்ருட வாழ் வுக்கு உபயோகப்படும் கருவியாகவே தோற்றியது . அற்றைக் கூலி பெற்று வாழும் தொழிலாளி ஒருவன்