பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்மிழின் பழமை 3.

தாளடைவில் பணத்தைச் சேமித்து வைக்கிருன். அது போலப் பாஷையில் தினந்தோறும் உபயோகப் படாத சேமிப்பு நிதி ஒன்று திரண்டது. ஒடி ஆடி, தொழிலும் வியாபாரமும் செய்து வாழும் வாழ்க்கை யில் அவசியமாக இருக்கும் பாஷைக்குப் புறம்பே, பழமையையும் புதுமையையும் நினைக்கவும் சிந்திக்க வும் பயன்படும் ஒரு பகுதி தோன்றலாயிற்று. சிந்தன லோகத்தில் அந்தப் பகுதி வளர்ந்தது. அதுதான் இலக்கியம். மனிதன் தினந்தோறும் சோறும் நீரும் உண்கிருன். பாயசமும் பட்சணமும் விழாக்களில் உண்ணுகிருன். அவ்வாறே பாஷையில் இலக்கியம் வந்தது. மனிதன் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க நிழல், தேடியது ஆரம்ப காலக் கதை. பிறகு அவன் மாட மாளிகை கூட கோபுரங்களேக் கட்டினன், இலேயாலும் தழையாலும் உடை உடுத்து மானத் தைக் காப்பாற்றியது போய்ச் சித்திரத் தூசும் செம் பொன்னடையும் புனேயலான்ை. அவன் பேசிய தாய் மொழியிலும் இப்படியே அவனது கருத்து வளம் பெறப் பெற இலக்கியங்கள் வளர்ந்தன.

ஒரு பாஷையைப் பேசும் மனித சமுதாயத்தின்ர் நெடுங்காலமாக வாழ்ந்தாலும், உயர் நிலையில் வாழ்ந் தாலும் அவர்களுடைய தாய்மொழியில் இலக்கியங்கள் பெருகும். உயர் நிலையில் வாழும் மக்களால் பேசப் பெருமையால், இன்னும் இலக்கியம் காணுமல் காட்டு: மிராண்டிகளின் தாய் மொயாக நிற்கும் மொழிகள் பல உலகத்தில் இருக்கின்றன. மனிதனது வாழ்க்கையில் அடிப்படையாக உள்ள உணர்ச்சிகளையும் செயல்களை யும் குறிக்கும் வார்த்தைகளும் வாக்கியங்களும் அந்த மொழிகளில் இருக்கலாம். அம்மக்கள் கட்டிக்