பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பயப்படாதீர்கள்

கொண்டு வாழும், தழைக் குடில்களைப் போல, அவர் கள் உண்டு வாழும் ஊன்யும் ப்ழங்களையும் போல, அந்த மொழிகள் வாழ்க்கைக்கு இன்றியமையாதன. வ்ாகிச் சுருக்கமாக உள்ளன. அவர்கள் ஊரில் மாட மாளிகை இல்லை; அவர்கள் உண்ணும் உணவில் அல்வா இல்லை; அவர்கள் ஆடையில் சரிைைக இல்லை; அவர்கள் பாஷையில் இலக்கிய வளம் இல்லை.

பலகாலம் நல் வாழ்வு வாழ்ந்த மக்களின் தாய் மொழியோ இலக்கிய வளம் பெற்று விளங்கும்: தமிழ்மொழி பலகாலம் வாழ்ந்து வரும் மனிதக் கூட் பத்தினரின் தாய்மொ; மிக நன்ருய் வாழ்ந்த மக்களின் மொழி. ஆதலின் நிச்சயமாக இதில் இலக்கியவளம் சிறந்து நிற்கத்தான் வேண்டும். தமிழனது வாழ்வின் உன்னத நிலையை அவன் கட்டிய கோபுரங்கள் காட்டுகின்றன; அவன் உண்ணும் அறுசுவை உண்டி புலப்படுத்தப்படுகிறது; அவன் பூணும் அணிவகை தெளி வாக்குகிறது; எல்லாவற்றிற்கும் மேலாக அவன் பேசும் மொழியில் உள்ள சேம நிதிகளாகிய இலக்கி யங்கள் காட்டுகின்றன.

மனித இன ஆராய்ச்சியாளரில் சிலர் ஆதி மணி தன் தமிழ் நாட்டிலே தோன்றின்ை என்று கூறுகின் றனர். தமிழனுடைய அங்க அமைப்பு இன்று நேற்று உண்டானதல்ல; பல காலமாக, பல ஆயிரம் ஆண்டு களாக அவன் தலையும் மூக்கும், வாயும் முகமும் பண் பட்டுப் பண்பட்டு இன்றைய நிலையை அடைந்திருக் கின்றன என்பது அவர் கூறும் செய்தி. உருவம் காலங்கண்ட பழமையைக் காட்டுவது உண்மையாக இருந்தால், அவன் தாய் மொழியும் அவைேடு நெடுங்காலங். கண்ட பழமையுடைய தென்றே சொல்லவேண்டும். -